தாம்பரம் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் சார்பாக மேடவாக்கத்தை சேர்ந்த அருண் மருத்துவமனையுடன் இனைந்து கொரொனோ இலவச தடுப்பூசி முகாமை ஜூலை 16, 2021 அன்று நடத்தியது ம.நீ.ம. இதனை நமது துணைத்தலைவர் A.G மௌரியா ஐ.பி.எஸ் (பணி ஓய்வு) அவர்கள் தொடங்கி வைத்தார். மேலும் மய்யத்தின் மாநில செயலாளர் (தலைமை அலுவலகம்) சரத்பாபு ஏழுமலை, மாவட்ட செயலாளர் (இளைஞர் அணி) மயில்வாகனன் தலைமையில் சுமார் பேருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்துமுதியவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகள் பயன்பெறும் வகையில் இலவச ஆட்டோ பயணம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை முன்னெடுத்துச் செயல்படுத்திய சுதீர், சங்கர் ரவி, பிரவீன், அக்சயா, பால் நியுலின், ராஜா, ஜெகன். ஹரி மற்றும் மிதுன் உடனிருந்தனர்.