தென்காசி மாவட்டம் குருவிக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிமாறன். அவர், தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக இருந்துவருகிறார். அவர், தற்போது நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தலில் குருவிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவராக மனுத் தாக்கல் செய்துள்ளார். அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கமலா என்பவரின் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றிமாறன் மனுவை நிராகரிக்கச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து, கடந்த 27-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலீன் வீட்டு முன்பு வெற்றிமாறன், திடீரென தான் மறைந்து வைத்திருந்த ‘டர்பன்டைன்’ என்ற வகை எண்ணெயை தனது உடலில் ஊற்றித் தீ வைத்துக் கொண்டார்.
இதனையடுத்து, 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டு காயமடைந்த அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் பெற்று வந்த நபரின் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.