திண்டுக்கல் : டிசம்பர் ௦7, 2௦22

ஆளும்கட்சிக்கொடி பறக்கலாம்… அடுத்த கட்சிக்கொடி பறக்கக்கூடாதா? பாகுபாடு பார்க்கும் அரசுக்கு கண்டனம் – மாநில செயலாளர் திரு முரளி அப்பாஸ் கண்டன அறிக்கை !

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உள்கட்டமைப்பு மற்றும் கட்சி வளர்ச்சிப்பணிகள் நிமித்தமாக தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தினை மாநில செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலையில் மாவட்ட செயலாளர்கள் உடன் மாவட்ட நிர்வாகிகள் உட்பட கலந்து கொண்டு வருகிறார்கள்.

அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் பொன்னகரம் பகுதியில் முன்பே நடப்பட்டிருந்த கொடிக் கம்பத்தினை கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிகளுக்காக அகற்றப்பட்டு இருந்தது, கால்வாய் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தது. எனவே முன்பிருந்த இடத்தில மீண்டும் கட்சிக் கொடியை நிறுவிட நிர்வாகிகள் பணிகளை துவக்கியபோது அங்கே கம்பம் மீண்டும் அமைக்கக் கூடாது என்று காவல்துறையினர் தடுக்கவே மாநில செயலாளர் மற்றும் நிர்வாகிகள் காவல்துறையினரிடம் இது குறித்து பேசினர். ஆனால் அங்கே மற்ற கட்சிக் கொடிகள் அதாவது கம்யுனிஸ்ட், திமுக மற்றும் பிஜேபி என மற்ற கட்சிக் கொடிகளை அங்கே நிறுவியுள்ள பொது மய்யம் கொடியை நிறுவ தடை சொல்வது ஏன் என கேள்வி எழுப்பியும் மேற்கொண்டு இது குறித்து சட்டரீதியாக நாங்கள் செல்வோம் என்றனர்.

பின்னர் தொடர்ச்சியாக அரசு அதிகாரிகளிடம் மற்றும் காவல்துறையினருடன் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்த பின்னர் அங்கே மக்கள் நீதி மய்யம் கட்சிக் கொடியை நிறுவிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

இதுவே மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்களின் அறவழி அவ்வழியிலேயே நமது மய்யம் நிர்வாகிகள் செல்வதும் அதுவே.

இந்நிகழ்வு தொடர்பாக மக்கள் நீதி மய்யம் உறவுகளின் முன்னெடுப்பில் ௦7.12.2௦22 அன்று ட்விட்டர் ஸ்பேஸ் வழியாக கட்சியின் மாநில செயலாளர்கள் திரு சிவ இளங்கோ, திரு செந்தில் ஆறுமுகம் மற்றும் மாநில இணைச் செயலாளர் திரு ஜெய்கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசிய இதில் இதர மாவட்ட நிர்வாகிகள் பலரும் தத்தமது பகுதிகளில் கட்சி கொடியினை ஏற்றுவது தொடர்பாக தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டதுடன் மேற்கொண்டு பல ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர். நடைபெற்ற உரையாடலை பதிவு செய்து (Twitter Spaces) அளித்ததனால் இங்கே அதன் லிங்கை இணைத்துள்ளோம்.

https://twitter.com/i/spaces/1rmxPkBABwgJN

மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றவிடாமல் தடுக்கும் திண்டுக்கல் காவல்துறையைக் கண்டிக்கிறோம். திண்டுக்கல் மாநகராட்சி பொன்னகரம் பகுதியில் ஏற்கனவே நடப்பட்ட மக்கள் நீதி மய்யக் கொடிக்கம்பமானது அந்தப் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தோண்டும் பணிக்காக அகற்றப்பட்டது.

தற்போது அந்தப் பணி முடிந்து, இன்று மநீம மாநிலச் செயலாளர் அவர்களின் தலைமையில் அந்தக் கொடிக் கம்பத்தை மீண்டும் அந்தப் பகுதியில் அமைக்கப் போகும்போது காவல் துறையினர் அதைத் தடுக்கின்றனர். அருகிலேயே பிற கட்சிகளின் கொடிக் கம்பங்கள் இருக்கும்போது, மய்யத்தின் கொடியை மட்டும் ஏற்றவிடாமல் தடுப்பது ஏன்? மய்யத்தின் கொடியை ஏற்றாமல் நகரமாட்டோம் என்று திண்டுக்கல் மாவட்ட மய்ய நிர்வாகிகள் காவல்துறையிடம் தெளிவுபடச் சொல்லிவிட்டனர்.

ஆளுங்கட்சி,பிஜேபிக்கு அனுமதி பிற கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு என்ற திண்டுக்கல் காவல்துறையின் மாற்றாந்தாய் மனப்போக்கை மக்கள் நீதி மய்யம் வன்மையாகக் கண்டிக்கிறது! – மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் பக்கத்தில் இன்று 07.12.2022

இன்று திண்டுக்கல் பகுதியில் மய்யக்கொடியை ஏற்றவிடாமல் தடுத்த காவல் துறையை கண்டு அஞ்சாமல் போராடி மய்யக்கொடியை வெற்றிகரமாக பறக்க விட்ட மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்! – Makkal Neethi Maiam

https://twitter.com/imuthukumar_MNM/status/1600819820098129920?s=20&t=pm23i8fkgrA2TqniW9bMPw