சென்னை – டிசம்பர் ௦8, 2022

உப்பிட்டவரை உள்ளவரை நினை என்பார்கள். உணவில் சுவையூட்டக்கூடிய உப்பையே உயர்வாக கருதுவதும், நாம் பசியாக இருக்கும் போது அந்த உணவை நமக்களித்து பசி போக்கியவரை எந்நாளும் மறந்திடக் கூடாது என்பதே இந்த பழமொழியின் நீதி. இன்னும் சொல்லப்போனால் நாம் சாதாரணமாக என்னும் உப்பு ஓர் பெரும் புரட்சியை சத்தியாகிரகம் எனும் வழியாக தோற்றுவித்தது நம் தேசப்பிதா மகாத்மாவின் அறப்போராட்டம் இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை சுதந்திரத்திற்கான போராட்டத்தினை தொடர்ந்திட எழுச்சியை உண்டாக்கியது.

சரிங்க இதற்கு இந்த கட்டுரையின் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு :

உப்பிடும் உணவை நாம் தயாரிக்க விவசாயிகள் மட்டுமே காரணம். வானத்திலிருந்து கொட்டுவது மழை மட்டுமே எந்த உணவும் அல்லது உணவுக்கு தேவைப்படும் அரிசி காய்கறி போன்றவைகள் மண்ணில் விளையும் பயிர்களை விதைத்து வளர்த்து நாள் தவறாமல் பாதுகாத்து அவற்றை அறுவடை செய்து நம் கைகளில் தரும் விவசாயிகள் எவ்வளவு போற்றுதலுக்குரியவர்கள் என்று சற்று யோசனை செய்து பாருங்கள்.

அவ்வாறு விளைவிக்கும் பொருட்களுக்கு அசலுடன் லாபமும் சேர்ந்தார்போல் கிடைக்கும் வகையிலே இருந்தால் மட்டுமே அவர்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்ல முடியும். இதில் நிலங்களை சொந்தமாக கொண்ட விவசாயிகள், விளை நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் ஆக இவையெல்லாம் இல்லாமல் தினக்கூலிக்கு பணியாளாக விவசாயம் செய்பவர்கள் என பலதரப்பட்ட வேளாண் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரமாக நம்புவது விளைவிக்கப்படும் பொருட்கள் சந்தைக்கு அனுப்பும் வகையில் கிடைக்கபெறும் உரிய விலைகள் மட்டுமே.

விவசாயத்தால் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருட்கள் யாவும் அவர்களே நேரிடையாக சந்தைக்கு அல்லது பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்வதில்லை. அவைகளை கொள்முதல் செய்து விற்பனைக்கு எடுத்துச் செல்வது இடைத்தரகர்கள் இருப்பார்கள். அவ்வாறு கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் விளைச்சலில் கழிவுகள் போக கிடைக்கப்பெற்ற பொருட்களுக்கு விலையை நிர்ணயம் செய்வதில் குளறுபடிகள் செய்வதும் நியாயமான விலையை தராமல் அடிமாட்டு விற்பனைத் தொகை என்பார்களே அது போன்று வெகு குறைவாக நிர்ணயம் செய்வதை வாடிக்கையாக செய்து வருவதாக தெரிகிறது. மிகக் குறைந்த விலை கொடுத்து கொள்முதல் செய்துவிட்டு சந்தைப்படுத்தும் போது பன்மடங்கு தொகைக்கு கைமாற்றி விடுகிறார்கள். இதில் அதிக லாபம் பார்ப்பது இடைத்தரகர்கள் மற்றும் சந்தைதாரர்கள் மட்டுமே கொள்ளை லாபம் என்பார்களே அது போல.

இதில் பெரும் நட்டமடைவது விளைவிக்கும் விவசாய பெருமக்கள் தான். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அடைகாக்கும் கோழி போல் பயிர்களைக் காத்து வளர்க்கும் அவர்களுக்கு மிஞ்சுவது எதுவும் இல்லை.

இதில் தற்போது நம் தமிழகத்தின் பல மாவட்டங்களில் விளைவிக்கும் பொருட்களுக்கு மிகச் சொற்பமான விலையை நிர்ணயிப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக கோவை தருமபுரி கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் அவற்றை சாலைகளில் கொட்டும் நிலை உண்டாகியுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மனம் பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. அதே போல் திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி திண்டுக்கல் மாவட்டங்களில் விளைவித்த வெண்டைக்காய்க்கு கிலோ ரூ 5 க்கும் குறைவாகவே விலை தருவதாக விவசாயிகள் வேதனை அடைகிறார்கள். இவை மட்டுமல்லாது இன்னும் பல விளைபொருட்களுக்கு போதுமான விலைகள் வைக்கப்படுவதில்லை என கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட அனைத்துப் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைத்திட வழிவகை செய்யும்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் விவசாயிகளின் நிலையை உணர்ந்து விளைபொருட்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவில் சாகுபடி செய்யும் விவசாயிகள், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் பரிதவிக்கும் நிலை தொடர்கிறது. குறிப்பாக,கோவை,தருமபுரி,கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால், சாலைகளில் கொட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல் மாவட்டங்களில், வியாபாரிகள் வெண்டைக்காய்க்கு கிலோ ரூ.5க்கும் குறைவாகவே விலை தருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுபோல, பல பயிர்களுக்கு குறைந்த விலையே கிடைப்பதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

காய்கறிகள், பழங்கள், மலர்கள் உள்ளிட்ட அனைத்து விளைபொருட்களுக்கும் நியாயமான விலை கிடைத்திட தமிழக அரசும்,மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. – மக்கள் நீதி மய்யம்