கோவை நவ-28

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் முன்னிட்டு நடைபெறும் தொடர் சேவையின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி, உடையாம்பாளையத்தில் 66வது வார்டு பகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வை முன்னின்று நடத்திய மக்கள் நீதி மய்யம் கோவை மண்டல அமைப்பாளர் லயன் ரங்கநாதன் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் அனுஷா ரவி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மய்யம் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.