சென்னையில் தொடர் மழை காரணமாக சூழ்ந்த வெள்ளம், திறமற்ற ஆட்சியாளர்கள் இத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகளில் மழை நீர் வடிகால்கள் அமைக்கப்பட்டதாக சொல்லபட்ட திட்டங்கள் வெறும் காகிதங்களில் மட்டுமே. மக்களின் வரிப்பணத்தில் தம் குடும்பம் மற்றும் சுற்றத்தார்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்.

வருமுன் காப்போம் என்பது நோய்களுக்கு மட்டுமே ஆன முன்னெச்சரிக்கை வாசகம் அல்ல இது போன்ற பேரிடர் காலங்களில் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் மூலம் நமது சுற்றுச்சூழல் கட்டமைப்பை சீராக செய்து வைத்தோமானால் இப்படி இன்னல்களை தவிர்க்க முடியும். ஆனால் ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் அக்கறையின்மையால் அவதிப்படுவது மக்கள் மட்டுமே.

பெய்து வந்த தொடர்மழையால் தமிழகம் முழுக்க வெள்ளம் சூழ்ந்தது, அப்படி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஒன்றான சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கத்தில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வீடுகளில் புகுந்த வெள்ளம் வடியாத நிலையில் உண்ண உணவும் இல்லாமல் தவித்த மக்களுக்கு நமது மக்கள் நீதி மய்யம் தனது உதவிக்கரங்களை நீட்டி சுமார் 1200 நபர்களுக்கு பிரியாணி பொட்டலங்களை நமது மாநில செயலாளர் (தலைமை நிலையம்) திரு சரத்பாபு ஏழுமலை அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்வினை முன்னின்று ஏற்பாடு செய்த ஷங்கர் ரவி, மாவட்ட செயலாளர் ராஜீவ் குமார் மற்றும் அப்பகுதியை சார்ந்த மய்ய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.