குமாரபாளையம் டிசம்பர் 02

மறைவுக்கு பின் தனது கண்களை தானம் செய்துள்ளார் குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் திரு. அறிவொளி சரவணன் (வயது 46 )

குமாரபாளையம் மக்கள் நீதி மய்யம் கிளையின் நகர செயலாளாராக பதவி வகித்து வந்த அறிவொளி சரவணன் 30.11.2021 அன்று காலை 7.30 மணியளவில் திடீரென மாரடைப்பின் காரணமாக மரணம் அடைந்தார். இவர் தாம் வாழும் காலத்திலேயே தனது கண்களை தானமாக தருவதாக பதிவு செய்து இருந்தார், அதன்படி அவர் மறைவுக்கு பின்னர் ஈரோடு அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் குழுவினர் நேரில் வந்து கண்களை தானமாக பெற்றனர்.

அவரது மறைவிற்கு மக்கள் நீதி மய்யம் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. நம்மவர் வழியில் அவரது நல்லெண்ணம் கொண்ட நற்பணிகள் இதுவரை இடைவிடாது செய்து வந்த அறிவொளி சரவணன் அவர்கள் தனது இறப்பிலும் நற்பணியை செய்து விட்டு சென்றுள்ளார்.

அத்துடன் சரவணின் இறுதிச்சடங்கு மற்றும் அஞ்சலிக் கூட்டம் மூலம் ஒன்று கூடி செய்து முடித்த உறவுகள் மூலம் முதற்கட்டமாக ரூபாய் 60 ஆயிரம் நிதி திரட்டி அவரது குடும்பத்தாரிடம் அளித்தனர்.

https://twitter.com/FoodkingSarath/status/1466420808180449285?s=20