கோவை நவம்பர் 21, 2021

கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் மற்றும் வாசன்கண்மருத்துவமனை, துளசி பார்மஸி ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று, கோவை வடமேற்கு மாவட்ட மய்ய அலுவலகத்தில், இலவச கண் பரிசோதனை , இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு கண்காணிக்கும் பரிசோதனை முகாம் நடைபெற்றது !
மாவட்டச் செயலாளர் எம்.தம்புராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாநில மாணவர் அணி செயலாளர் ராகேஷ்,
மண்டல மகளிர் அணி செயலாளர் திருமதி அருணா, மத்திய மாவட்டச் செயலாளர் D.பிரபு, உள்ளிட்ட மய்ய நிர்வாகிகள்
பலர் முன்னிலை வகித்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை சிகிச்சை பெற்றனர்!