பாலியல் தொல்லையால் கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. அவரது மரணத்திற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும். வேலியே பயிரை மேயும் அவலத்திற்குத் தமிழகம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

ஆர். எஸ். புரம் சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ சட்டத்தில் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவியின் இழப்பு சமூகத்திற்கு பேரிழுக்கு

Strongly Condemn act of teacher Mithun Chakravarty,Chinmaya Vidhyala RS Puram Coimbatore who sexually assaulted +2 girl Pon Dharani who sadly committed suicide.

கோவைதெற்கு தொகுதி கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் 12ம் வகுப்பு மாணவி பொன் தாரணி பாலியல் சீண்டலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, அவரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், இச்சம்பவத்திற்கு காரணமான நபர்கள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அவரின் வீட்டின் முன் நடத்தப்பட்ட அனைத்து கட்சி ஆர்பாட்டத்தில் மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.