திருச்சி டிசம்பர் 6, 2021

நல்ல செயல்களுக்காக மக்களின் நலன் நோக்கி சாயும் மய்யம் தராசின் முள் – மதுவுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம்.

சுமார் 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் கண்ணாமூச்சி ஆட்டமே மதுவிலக்கு என்பது. ஒவ்வொரு தேர்தலின் போது இந்த வாக்குறுதி அளிக்கப்படும் பின்னர் ஆட்சி அமைந்ததும் அந்த வாக்குறுதி ஆழ் கிணற்றில் போட்ட கல் தான். அதில் எந்த ஈடுபாடும் காண்பிக்க மாட்டார்கள் ஆட்சியாளர்கள் மாறாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வார்கள். ஏன் எனில் இரு கட்சிகளின் பெரும்புள்ளிகள் தம் வசம் மதுபான ஆலைகள் நடத்திக் கொண்டு வருவது தான். பொதுவெளியில் ஒருவரை ஒருவர் குறை சொல்லி கண்டித்து அறிக்கை விடுவதெல்லாம் வெறும் கண் துடைப்பு மட்டுமே. ஆனால் சாராய ஆலைகளில் இருந்து எந்த தடங்கல் இல்லாமல் மதுபானங்கள் டாஸ்மாக் வழியாக விற்பனை செய்யப்பட்டு மது குடிக்கும் மக்களின் உடல்நலனை பதம் பார்த்து பழுதாக்கி கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை சிந்தாமணி பஜார் பிரதான சாலையில் ஒரு குளிர்சாதன மது கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பகுதியில் தான் நாளைய இந்தியாவின் சிற்பிகள் எனப்படும் மாணவர்கள் பயிலும் பள்ளிக்கூடங்கள் அமைந்து உள்ளது. அவை முறையே சாவித்திரி வித்யாலயா, இந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர் சி நடுநிலைப்பள்ளி மற்றும் புனித சோபியா நர்சரி மற்றும் ஆரம்பப்பள்ளி ஆகியன பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வந்து செல்லும் பிரதான வழியாக உள்ளது. அப்படி மதுபானக் கூடம் அமைக்கப் பட்டால் மாணவர்களின் பள்ளி சென்று வர சிரமம் ஏற்படும் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அனைவருக்கும் இடையூறு விளைவிக்கும்.

இதை உணர்ந்த நமது மக்கள் நீதி மய்யம் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் என் சுரேஷ் உட்பட மற்ற மய்ய நிர்வாகிகளும் இணைந்து மது அருந்தும் கூடம் நிறுவக்கூடாது என்றும் அந்த நடவடிக்கையை தடை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்து அதனை ஓர் மனுவாக உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று 06.12.2021 அன்று நேரில் அளித்தனர்.

கொரொனோ தொற்று காலமான ஊரடங்கு அமலில் இருந்த சென்ற 2020 ஆண்டில் மே மாதம் துவக்கத்தில் அதிமுக அரசின் மதுக்கடைகளை திறக்கும் திடீர் அறிவிப்பால் இதர கட்சிகளை போலல்லாமல் துணிந்து செயல்பட்டு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கும் அரசின் ரத்து செய்யவேண்டி நமது மக்கள் நீதி மய்யம் சென்னை உயர்தீமன்றதில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/tamilnadu/553436-mnm-filed-a-case-against-tasmac-shops-open.html