சேலத்தில் அமைச்சரை வரவேற்க சாலையோரத்தில் திமுக கொடி கம்பங்களை நடும் போது 10 வயது பள்ளி மாணவியின் மீது கொடி கம்பம் பட்டு  மூக்கு தண்டு உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகர் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்திப்பதற்கு வரும் அமைச்சர் கே.என்.நேருவை வரவேற்க திமுக கொடி கம்பங்கள் நடப்பட்டு வந்தன.

அப்போது தாதகாப்பட்டி பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடைய மனைவி விஜயா தன்னுடைய குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது திமுகவினரால் நடப்பட்டு வந்த கொடிக்கம்பம் மோதி மாணவியின் மூக்கு தண்டு உடைந்தது.

Source: https://tamil.abplive.com/news/tamil-nadu/salem-a-10-year-old-girl-broke-her-nose-when-the-dmk-flag-pole-placed-to-welcome-the-minister-fell-29050

பொறுப்பில் இருக்கும் அமைச்சரே இப்படி பொறுப்பில்லாமல் நடந்து கொண்டால் மக்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் விளம்பர மோகத்துக்கு இன்னும் எத்தனை உயிர் பலி கேட்பீர்கள்? உங்க வீட்டு பொண்ணுக்கு இவ்வாறு நடந்திருந்தால் சும்மா இருப்பீர்களா @KN_NEHRU அவர்களே செய்தி: