சென்னை மாநகராட்சி: 106 கோடி யார் கணக்கு? திட்டம் போட்ட கடந்த ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். அவர்களை குறை சொல்லி ஆட்சிக்கு வந்த புதிய ஆட்சியாளர்களும் பேச மாட்டார்கள். ஆனால் நாம் கேள்வி கேட்பதை நிறுத்தாமல் பதில் கிடைக்கும் வரை தொடர வேண்டும்.
கடந்த ஆட்சியில் @chennaicorp 106 கோடி மதிப்புள்ள டெண்டர் கொடுத்து சீரமைப்பதாக சொல்லிய 47 குளங்களின் நிலையும் இதே போல மோசமாக தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு இவற்றை ஆய்வு செய்து காப்பாற்றுமா? அல்லது பழி போட்டுவிட்டு சும்மா இருக்குமா?
கொட்டிவாக்கம் பகுதியில் இருந்த அழகான தாமரைக்கக்கேணி குளத்தை ஆக்கிரமித்து கான்கிரீட் தண்ணீர் தொட்டி கட்ட சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை கொடுத்த அதிகாரிகள் யார்? அதை அனுமதித்த அமைச்சர் யார்? செய்த தவறுக்கு இவர்களை பொறுப்பேற்க வைப்பது எப்படி?