கோவை தெற்கு டிசம்பர் 14, 2021

கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம் சார்பில் கேட்கப்பட்டது தான் தாமதம், மலையிலிருந்து கொட்டும் அருவியென குறைகள் அனைத்தையும் பட்டியலிட்டு கொட்டித் தீர்த்து குமுறி நின்றார்கள்.

அவர்களின் நிலை கண்டு விக்கித்து நின்ற நம் மய்யம் உறவுகள் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முயற்சி மேற்கொள்வோம் அப்போது நீங்கள் எங்களுடன் இணைந்து போராட ஆயத்தம் ஆகிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர். ஆண்டாண்டு காலமாய் நான் நீ என மார் தட்டும் கழகங்கள் தேர்தலின் போது தேனொழுக பேசி ஜெயித்த பின் கண்டுகொள்ளாமல் விடுவது தொடர்வது எவ்வளவு அக்கிரமம்.

https://www.facebook.com/thajudeen.tk/videos/974990843098174/