கோவை 19 டிசம்பர் 2021

கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ் மற்றும் ஏதேனும் எதிர்பாரா அசம்பாவிதம் நடைபெற்றால் தீயணைப்பு வாகனம் கூட வந்து செல்ல முடியாதபடிக்கு ஒழுங்குமுறையற்ற பார்க்கிங் செய்யப்பட்டு வந்த நிலையில் அதை ஒழுங்குபடுத்தும் விதமாக மாவட்ட செயலாளர் திரு.பிரபு அவர்கள் தலைமையில் நகர செயலாளர் திரு தாஜுதீன் அவர்கள் உடன் இணைந்து வார்டு செயலாளர் பலர் சாலையின் ஒரே பக்கமாக பார்க்கிங் செய்யும்பொருட்டு அதற்கான பணிகளை செய்து முடித்தனர். நீண்டகால அவதியில் இருந்த அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இப்பணியை சிறப்பாக செய்து முடித்த மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளை காவல்துறையினரும் பாராட்டினர்.