இந்தியாவில், MSMEகள் நாட்டின் மொத்த உள்நாட்டு GDP கிட்டத்தட்ட 8%, உற்பத்தியில் 45% மற்றும் நாட்டின் ஏற்றுமதியில் தோராயமாக 40% பங்களிக்கின்றன. அவர்களை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று குறிப்பிடுவதில் தவறில்லை.

MSMEகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஒரு முக்கியமான துறையாகும் மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன. இது வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டின் பின்தங்கிய மற்றும் கிராமப்புற பகுதிகளின் வளர்ச்சிக்கு கைகோர்த்து செயல்படுகிறது. அரசாங்கத்தின் (2018-19) ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 6,08,41,245 MSMEகள் உள்ளன.

இவ்வாறு இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூலப்பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கு தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் அவர்கள் மத்திய மாநில அரசுகள் உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

https://timesofindia.indiatimes.com/business/india-business/one-day-strike-to-lead-to-rs-25000-crore-production-loss-msme-association/articleshow/88305746.cms