சிலர் திரையுலகில் பெயர் புகழ் பணம் என ஈட்டுபவர்கள் அவ்வப்போது தான தர்மங்கள் கிள்ளிக் கொடுப்பார்கள் அதில் விதிவிலக்காக அள்ளிக் கொடுப்பவர்கள் சிலர் அவர்களை கூட விரல்விட்டு எண்ணி விடலாம் ஆனால் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் ஆனால் அதிலும் சிறந்தது இரத்த தானம் என்பதே உயரம். இவை இல்லாமல் அனைத்திற்கும் மேலாக முத்தாய்ப்பு வைத்தாற்போல் தனது உடலை மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் சுதந்திர தினம் அன்று தானமாக அளித்த மாபெரும் ஓர் மக்கள் நலனில் உண்மையான அக்கறையும்அன்பும் கொண்ட தன்னிகரற்ற பரந்த மனப்பான்மை கொண்டவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.

ஆம், திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் அதன் கதையமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் புதுமையை புகுத்தும் நம்மவர் தனக்குப் பின் தனது உடலை தானமாக தர ஒப்புக்கொண்டு இந்த தானத்தில் ஓர் புதுமையை செய்து அதன் உறுதிமொழி பத்திரத்தை ஆகஸ்டு 15 2002 அன்று சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனர் திரு ரவீந்திரநாத் அவர்களிடம் அளித்தார், அப்போது தனது மூத்த மகளான செல்வி ஸ்ருதி ஹாஸன் அதற்கான ஒப்புதலை ஓர் சாட்சியாக பதிவு செய்தார்.

https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/kamal-hassan-donates-his-organs-to-mmc/articleshow/19186271.cms