கடந்த அதிமுக ஆட்சியில் லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையில் பணியாற்றி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி மற்றும் ராஜேந்திர பாலாஜி உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார்களில் யார் மீதும் FIR கூட பதிவு செய்யாமல் புகார்களை தள்ளுபடி செய்து அதிமுக ஆட்சியின் ஊழலுக்கு துணையாக நின்ற பொன்னி IPS அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து மதுரை DIGயாக நியமித்து திமுக ஆட்சியில் கவுரவித்து உள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஊழல் புகார்களில் இருந்து காப்பாற்றியதற்காக பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவருக்கு, அதற்கு பதிலாக திமுக ஆட்சி கொடுக்கும் வெகுமதி தான் இந்த பதவி உயர்வு.

ஊழலை ஒழிக்கும் (ஒளித்து வைக்கும்) உங்களின் இந்த முயற்சிக்கு வாழ்த்துகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே !