கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையங்கள் ஆன்லைன் பதிவு – மநீம வரவேற்ப்பு

கடந்த ஜனவரி 19 அன்று மக்கள் நீதி மய்யம், அறுவடை காலங்களில் தேவையான நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைக்காததை கண்டித்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை மேம்படுத்த வலியுறுத்தி தமிழக அரசுக்கு விவசாயிகளின் சார்பாக அறிக்கை வெளியிட்டிருந்தது. அதை தொடர்ந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்களிலேயே ஆன்லைன் பதிவு செய்யப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், விவசாயிகளின் நிலம் தொடர்பான தரவுகளை நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுடன் இணைப்பதால், அவர்கள் அசல் சிட்டா பெறக் காத்துக்கிடப்பது தடுக்கப்படும். இதையும் நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என மநீம கோரிக்கை விடுத்துள்ளது.