பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல – மக்கள் நீதி மய்யம் கண்டனம்.

தமிழ் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் பங்குபெறும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி ஜனவரி 15ஆம் தேதி ஒளிபரப்பானது. அதில் குழந்தைகள் பணமதிப்பிழப்பு தனியார்மயமாக்கல் மற்றும் பிரதமரின் வெளிநாட்டு சுற்றுப்பயணம் போன்றவற்றை விமர்சித்து இருந்தனர்.

இதற்கு மத்திய அரசு தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்ததை கண்டித்து மக்கள் நீதி மய்ய மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் “மத்திய அரசின் இந்த செயல் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் சர்வாதிகாரப் போக்கு, பிரதமர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.