நல்லது செய்வது என முடிவெடுத்து அதைச் செயல்படுத்தி வரும் நமது மய்ய உறவுகள் என்றைக்கும் அந்த நல்லெண்ணத்தை விட்டுத் தந்ததில்லை உதவி கோரியவர்களை விட்டு விலகியதுமில்லை.

இந்த புத்தாண்டு நாளன்று உற்ற தந்தையை இழந்து கண் பார்வையற்ற தன் தாயுடன் வாழும் செவித்திறன் அற்ற யாழினிஸ்ரீ எனும் பெண் குழந்தைக்கு அக்குறையை நீக்கும் செவித்திறன் அளிக்கும் கருவியொன்றை தங்களது அன்புப் பரிசாக அளித்தனர் கீதாலட்சுமி மற்றும் ஆனந்த் ஆகியோர்.

பெற்றால் தான் பிள்ளையா என்ன ? நம்மவர் எவ்வழியோ அவ்வழியே தொண்டு செய்யும் நம்மவர்கள், இருவருக்கும் நன்றியும் பேரன்பும் பாராட்டுக்கள்.