சென்னை ஜனவரி 03, 2022

மழை விட்ட பின்னும் விடாத தூவானம் போல கொட்டிய மழையில் தேங்கிய நீர் வடியாமல் சோகம் தந்து விடியாமல் நிற்கும் மக்கள்.

மூன்று இலக்க எண்ணிக்கைகளில் அள்ளித் தெளித்த வாக்குறுதிகள் எதையும் சரிவர செய்து தராத ஆளும்கட்சியான பழம்பெரும் கட்சி எந்த இலக்கிணை அடைய முற்பட்டார்களோ அவற்றை அடைந்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் சொன்னதை செய்யாமல் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கும் அவலம் தொடர்கிறது.

2021 டிசம்பர் மாத இறுதி நாட்களில் இருந்து பெய்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்கும் இடம் சென்னை வளசரவாக்கம் பகுதியில் 152 ஆவது வட்டம் சுப்பிரமணியசாமி 8, 9, மற்றும் 10 ஆவது தெருக்களில் அமைந்துள்ள வீடுகளில் சூழ்ந்து இருந்த வெள்ளம் இன்றும் வடியாமல் தேங்கி நிற்கிறது என களத்தில் நேரில் சென்று கண்டுணர்ந்த திருவள்ளூர் தென்மேற்கு மற்றும் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆர்கே நகரில் வேட்பாளராக போட்டியிட்ட மாவட்ட செயலாளர் ஆன திரு பாசில் அவர்கள் அங்கு வசிக்கும் மக்களிடம் வருடந்தோறும் மழைக்காலங்களில் அவதிப்படும் இந்நிலைக்கு நிரந்தர தீர்வு காண அரசாங்கத்திடம் உள்ளூர் நிர்வாகத்திடம் வலியுறுத்தி அதை நடைபெறசெய்ய அதற்கான வழிமுறைகள் மக்கள் நீதி மய்யம் மூலமாக முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இரண்டு கழகங்களின் ஆண்டுகால தொடர் வெற்றிகளினால் கூட மக்களின் அடிப்படைத் தேவைகளை செய்ய தவறியதை சுட்டிக்காட்டிய அவர் அதிகாரப்பூர்வ அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற பதில்களும் மெத்தன போக்கும் அங்கே வசித்த மக்களில் பெரும்பாலோனோர் தற்போது அங்கிருந்து வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் கொண்டுள்ளனர்.

இதற்கான தீர்வுகளை விரைந்து செய்து தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பாக கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் இதற்கு முந்தைய ஆட்சியாளர்களை ஒருவருக்கொருவர் குறை சொல்லிக்கொண்டு இருக்காமல் தீர்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே மய்யத்தின் முக்கிய எண்ணம்.