சிவகாசி 03, ஜனவரி 2022

சிவகாசி மாவட்டம் திருத்தங்கல் பகுதியில் இருக்கும் குப்பைக் கொட்டும் கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி விருதுநகர் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் திரு காளிதாஸ் அவர்கள் மூலமாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.

விருதுநகரில் இருந்து சிவகாசி செல்லும் பிரதான சாலையில் திருத்தங்கல் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்ட கூடிய குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இது நாள்தோறும் பெரும்பாலான அளவில் பொதுமக்கள் சென்று வரக்கூடிய முக்கியமான பாதையாகும். அவ்வகையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அங்கு சேகரிக்கப்படும் குப்பைக் கழிவுகள் மூலம் துர்நாற்றம் வீசுகிறது. காற்றின் வழியாக சுகாதாரக்கேடு உண்டாகிறது.

மழைக்காலம் வந்தது என்றால் சொல்லவே தேவையில்லை, குப்பைகள் சுமந்து வந்து செல்லும் வாகனங்கள் மற்றும் அந்த வளாகத்தினுள் தேங்கும் மழைநீர் வெளியேறி பிரதான சாலைகளில் கலந்து விடுவதால் சகதியாகி விடுகிற அவலமும் ஏற்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் உள்ளே சேகரிக்கப்படும் குப்பைகளை சிலசமையங்களில் தீ வைத்து எரிக்கும்போது மேலெழும்பும் புகையானது காற்றின் மூலமாக பரவி பொதுமக்களின் சுவாசத்தில் கலந்து இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கிருக்கும் குப்பைக் கிடங்கினை அகற்றி வேறேனும் மக்கள் நடமாட்டம், வசிப்பிடம் அல்லாத வேறிடத்தில் அமைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளும் மனு எழுத்துபூர்வ மனு ஒன்றினை விருதுநகர்மாவட்டம் உயர்திரு ஆட்சித்தலைவர் அவர்களிடம் சமர்பித்து விரைவில் ஆவண செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளது மய்யம்.

சுத்தமே சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரமே மக்களின் வாழ்வின் மிக முக்கிய ஆதாரம்.