தாம்பரம் ஜனவரி 24, 2022

தடுமாறும் தாம்பரம் நகராட்சி சாலைப்பணிகள், கமிஷன் மூலம் கல்லா கட்ட காத்திருக்கும் அரசியல்வாதிகள் அவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகள்.

மாநகரில் பரந்து விரிந்திருக்கும் சாலைகள் முழுதும் தரமற்றதாக இருக்கக் காரணம் என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்தால் அதன் பதில் கமிஷன் கொடுக்க நேர்வதே என்றே இருக்கும். உங்களின் எண்ணம் முற்றிலும் சரியே.

சென்ற 2021 ஆம் ஆண்டில் பெய்து தீர்த்த மழையால் வெகுவாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ஒப்பந்ததாரர்கள் தயங்கும் நிலை சென்னை புறநகரான தாம்பரம் மாநகராட்சியில் சமீபமாக ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்றால் அரசு அதிகாரிகளும் அங்கிருக்கும் உள்ளூர் அரசியல்வாதிகளும் தங்களுக்கு கமிஷனாக கொடுக்கும்படி கேட்கும் தொகையின் சதவிகிதம் 55% எனும் அதிரச்செய்யும் தகவல் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வருகிறது. அதாவது சுமார் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சாலை போடப்பட வேண்டும் என்றால் அதற்கான கமிஷன் தொகையாக சுமார் 55 ஆயிரங்கள் தர வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுவதால் தாங்கள் தயங்குவதாக தெரிவிக்கின்றனர்.

அரசு அதிகாரிகள் மழையால் சேதமடைந்த சாலைகளை தரமானதாக அமைக்க வலியுறுத்துவதால் இருப்பினும் அதில் ஆர்வம் காட்டாமல் தாம்பரம் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டுவதின் காரணம் பெரும் தொகையாக கமிஷனை தந்துவிட்டால் எங்களால் எப்படி சாலைகளை தரமாக போட்டுத் தர இயலும் என்று கேட்கிறார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் மழையின் காரணமாக சேதமடைந்த 132 சாலைகளை 2021-22 ஆம் ஆண்டுக்கான மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ-9.63 கோடிகளில் சீரமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டு நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சாலைப்பணிகள் நடைபெறுவதில் முறைகேடுகள் நடைபெறுவதாக வந்த புகார்களின் அடிப்படையில்தாம்பரம் நகராட்சி நிர்வாகத்தின் நம்பகத்தன்மையை அதிகாரிகளின் பணிகளை மற்றும் போடப்படும் சாலைகளின் உறுதித்தன்மைக்காக போடப்படும் பொருட்களின் தரத்தினை, நீள அகல அளவுகளை ஆய்வு செய்ய அண்மையில் தலைமைச் செயலர் திரு வெ இறையன்பு ஐ.எ.எஸ் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குனர் திரு பா.பொன்னையா அரசின் விதிகளுக்கு உட்பட்டு சாலைகளை தரமாக அமைக்கப்பட வேண்டும் என்றும் அப்படி நடைபெறும்போது அதன் மீது புகார்கள் ஏதேனும் வரும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

படம் : தாம்பரம் ரயில் நிலையம் செல்லும் வழி

இது குறித்து பேசிய துறை பொறியாளர்கள் அமலில் உள்ள விதிகளின்  படி மட்டுமே தரமாக சாலைகளை அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் ஆயினும் தயக்கம் காட்டும் ஒப்பந்ததாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்க ஒப்பந்ததாரர்கள் சிலர் தங்கள் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தனர் ஒவ்வொரு அரசு விதிகளுக்கு உட்பட்டு சாலைகளை தரத்துடன் அமைத்துத்தர நாங்கள் தாயராக இருக்கிறோம் ஆனால் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் சுமார் 55 சதவிகிதம் வரை கமிஷனாக கொடுக்க வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகிறோம் மட்டுமில்லாது மூலப்பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது இவற்றையெல்லாம் மீறி எங்களால் எப்படி மீதம் இருக்கும் மதிப்பில் தரமான சாலைகளை அமைத்துத்தர முடியும் என்று கேள்வி எழுப்பும் அவர்கள் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.

தாம்பரம் நகராட்சி நிர்வாகம் இதுவரை பணிகளை செய்து முடித்த ஒப்பந்ததாரர்களுக்கு தரவேண்டிய தொகையாக ரூ.25 கோடிகளுக்கு மேல் பாக்கி வைத்துள்ளதால் கடன் சுமையால் தள்ளாடும் நாங்கள் இவ்வளவு பெரிய தொகையை கமிஷனாக கொடுத்துவிட்டு சாலைகளை தரமாக அமைத்துத் தருவது சாத்தியமில்லை என்று வேதனையுடன் கூறுகின்றனர்.

குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்கும் ஒப்பந்ததாரர்களின் மனம் அடர்ந்த வேதனைகளால் நிரம்பி நிற்கிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/760245-roads-damaged-by-rain.html