கோவை பிப்ரவரி 17, 2022
கோவை மாநகராட்சி வார்டு எண் 97 இல் போட்டியிடும் 22 வயதுடைய இளம்பெண் நிவேதா சேனாதிபதி, இவர் திமுக வின் கோவை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆக பதவி வகிக்கும் சேனாதிபதி என்பவரின் மகளாவார்.
இவரை எதிர்த்து போட்டியிடும் நிரஞ்சனா என்பவர் கஸ்தூரி கார்டன் எனும் அப்பகுதியில் வசிக்கும் 591 குடும்பங்களுக்கு இட்லி குக்கர்களை பரிசாக வழங்கினார் என்றும் மேலும் சுமார் 2 கோடிகள் ரூபாய் வரை வார்டு பகுதி பொதுமக்களுக்கு பரிசுப் பொருட்களை விநியோகம் செய்து வருவதாக தேர்தல் ஆணைய அதிகாரியிடம் புகார் செய்தார் நிரஞ்சனா என்பவர். மேலும் நிவேதா சேனாதிபதி வார்டு எண் 38 இல் வசித்து வருகிறார். வசிப்பது ஓரிடம் போட்டியிடுவது ஓரிடம் ஏன் என்று கேள்வி எழுப்பினார் நிரஞ்சனா.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 16 அன்று நிவேதா மேல் பின்வரும் புகார் ஒன்றை அளித்தார் அதில் விதிமுறைகள் மீறப்பட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுகிறது சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் திமுகவின் நிவேதா சேனாதிபதி அவர்களின் மேல் கிரிமினல் வழக்கு பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த நிரஞ்சனா தேவி எனும் இவரையும் இவரது கணவர் விஜயகுமார் ஆகிய இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி உள்ளது இந்திய கம்யூனிஸ்டு கட்சி.
கூட்டணி கட்சியின் வேட்பாளர் முறைகேடாக நடக்கிறார் என்று சொன்னவர்கள் நீக்கப்பட்டுள்ளது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுதல் குற்றமல்ல என்பதான தோற்றத்தை தருவதாக தான் எடுத்துக் கொள்ள முடியும்.
https://simplicity.in/coimbatore/english/news/96339/