சீரழியும் தமிழகம் பிப்ரவரி 19, 2022

கடந்த ஆண்டில் ஆட்சியைப் பிடித்த விடியல் அரசு திமுக. இதற்கு முன்னர் 2011 ஆண்டு முதல் 2021 வரை ஆட்சியை பிடிக்க முடியாமல் 10 வருடங்களாக இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்துக்கொண்டிருந்த திமுக 2021 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னுடன் 11 தேசிய மற்றும் மாநில கட்சிகளை கூட்டணியாக இணைத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மூலம் அதிமுக வின் கூட்டணியை வென்று ஆட்சியைப் பிடித்தது. இதற்கு மிக முக்கிய பங்கு வகித்தது பிரஷாந்த் கிஷோர் – ஐ பாக் சொல்யூஷன்ஸ் ஏஜென்சி மூலம் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொண்டு ஆங்காங்கே சின்ன சின்ன மாற்றங்களை செய்து, செயல்தலைவரை தலைவராக்கி தெருவில், சாலையில், தேசிய நெடுஞ்சாலையில், சிற்றுண்டி விடுதிகளில், தேநீர் கடைகளில் வெகு சாமானிய மக்களில் ஒருவராக போட்டோ வீடியோ ஷூட்டிங் எடுத்து அதற்கு பொருத்தமாக நான்கைந்து வரிகள் பாடல் மற்றும் பின்னணி இசையில் சகட்டுமேனிக்கு தமிழகம் முழுக்க நாளிதழ்களில் தொலைக்காட்சிகளில் நாராசமாய் ஒலிக்கவிட்டு வகுத்துக்கொடுத்த ப்ளான்.

தனது அணியில் இருக்கும் 11 கட்சிகளின் வாக்கு வங்கியை நம்பாமல் பளபளக்கும் கரன்சிக்களை ஏற்கனவே கோவிட் பெருந்தொற்றால் வெறுத்துப்போய் இருந்த பெரும்பாலான மக்களை உண்மையில் செய்வதற்கு வழிவகையை ஆராயாமல் வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை பரப்புரை செய்யும் வழியெங்கும் அள்ளித் தெளித்துக்கொண்டே சென்றனர் தந்தையும் மகனும்.

தமிழக சட்டமன்றத்தில் கூட்டணி கட்சிகளின் ஆமாம் சாமி போடவைத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதை தமிழக ஆளுநரின் ஒப்புகைக்கு அனுப்பி வைத்த நீட் தேர்வு ரத்து மசோதா போன வேகத்தில் சுவற்றில் அடித்த பந்து போல திரும்பி வந்தது.

திமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நிலை.

பின்னர் மீண்டும் ஓர் மசோதா என இப்படியே எட்டு மாத காலம் கடந்து போனது, செய்து முடிக்க வேண்டிய கடமைகள் அப்படியே அந்தரத்தில் தொக்கி நிற்கிறது.

வாக்குறுதிகள் மற்றும் மறுப்புகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது நீதி மன்றம்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகக் குறைந்த அளவீடு மூலம் வெற்றி பெற்ற மமதை தலைக்கேற ஆடத் துவங்கிய திமுக உள்ளாட்சித் தேர்தல் நடந்த இன்றைக்கு ஆடியது உச்சகட்ட அக்கிரம ஆட்டம்.


இவர்களின் செயல்கள் ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு நல்ல விஷயமும் இல்லாமல் போகவே தோல்வி பயம் நெருக்கத் துவங்கியதும் தமிழகமெங்கும் இப்படி கேவலமான அரசியல் அசிங்க கூத்தை நடத்தி வைத்து இருக்கிறது. இதை எதையும் காதில் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருப்பது கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிற கட்சிகள்.

கோவையில் பலத்துடன் இருக்கும் ம நீ ம பற்றிய தகவல்கள் தமது வெற்றி வாய்ப்பை பாதித்து விடும் என்று அஞ்சி அதுவரை கூண்டுக்குள் அடைபட்ட மிருகமாய் தன்னுள் இருந்த அத்தனை கழிவுகளையும் ஒவ்வாத செயல்களையும் ஒவ்வொன்றாய் செய்யத் தொடங்கியதில் இன்று நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் ஓர் முக்கிய சாட்சி.

https://www.facebook.com/FoodkingSarathbabu/videos/5222451094454024/
சென்னை வார்டு எண் 173 மய்யம் வேட்பாளருடன் மாநில செயலாளர்கள் சரத்பாபு மற்றும் ஸ்னேஹா மோகன்தாஸ்
தினேஷ் பாஸ்கர் ம நீ ம வார்டு எண் 25