ஈரோடு பிப்ரவரி 20, 2022

ஈரோடு நகராட்சி வார்டு எண் 49 இல் பூத் எண் 253 & 254 வாக்குப்பதிவு அன்று நடந்த உண்மைச்சம்பவம். மநீம சார்பாக தேர்தலில் போட்டியிட்ட திருமதி விஜி எனும் வேட்பாளரின் உறவினர் மேற்கண்ட பூத்களில் கள்ள ஓட்டுக்கள் பதிவானதாக வந்த தகவலின் படி சென்று பார்க்க அங்கே முன்பே ஓட்டு போட்டு சென்றவர்களை அழைத்து மையை அழித்துவிட்டு மீண்டும் ஓட்டுக்கள் போடப்பட்டது. அப்படி திமுகவினர் செய்துகொண்டிருந்தபோது அங்கே சென்ற இளம்பெண்ணிடம் (அவர் ம நீ ம வேட்பாளரின் உறவினர் என்று தெரியாமல்) கள்ள ஓட்டு போடுமாறு கேட்கவே அதிர்ச்சியுற்றவர் தனது மொபைல் போனில் அவர்களை படம் பிடித்துள்ளார். மேலும் எந்தவித அச்சமும் இன்றி தனது உயிருக்கு ஒருவேளை ஆபத்து வந்தால் என்பது பற்றி கவலைப்படாமல் துணிந்து அங்கே நடந்தவற்றை பதிவு செய்தார். வாக்காளருக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பது என்று சட்டத்திற்கு புறம்பான செயல்களை தொடர்ந்து செய்து வரும் திமுகவினர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். இந்த அநியாயம் அக்கிரமத்தை தட்டிக்கேட்ட இளம்பெண்ணுக்கு தனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கோகிறது மக்கள் நீதி மய்யம் சார்ந்த மய்யத்தமிழர்கள்.

https://twitter.com/maiamofficial/status/1495335227635351553?t=qo8uNM9X91tHgCpi_EapCw&s=08