கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.

அதாவது உலகத்தில் மனிதர்களுக்கு கல்வி தான் சிறந்த செல்வம் ஏனைய செல்வங்கள் இதற்கு இணையாக மாட்டாது என்பது இதன் பொருள்.

ஆமாங்க இந்த உலகத்தில் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் அங்கே நீங்கள் கற்ற கல்வி மூலம் கிடைக்கும் பணி உங்களின் வாழ்வை எந்தவித தொய்வும் இன்றி செம்மையாக்கி விடும் ஆற்றல் உடையது.

நமது தலைவர் அடிக்கடி சொல்வது “எனக்கு படிக்கணும்னு ஆசை இருந்தது என்னவோ உண்மை ஆனா அப்போ இருந்த சந்தர்ப்பங்கள் எனக்கு படிப்பில் ஈடுபாட்டை கொடுக்கல பதிலாக நான் கலைத்துறைக்கு வந்து வளர்ந்து இன்னைக்கு உங்க முன்னாடி நிற்கிறேன், எனக்கு படிக்க இந்த சினிமா இருந்தது அதில் டிகேஎஸ் அய்யா, கேபி சார் அப்படிப்பட்ட நல்ல வாத்தியார்கள் என்னை கைககளை பிடிச்சு சொல்லிக்கொடுத்து ஆளாக்கி விட்டார்கள். எனக்கு தெரிஞ்ச விஷயங்களை கேட்டு புரிஞ்சு கத்துக்கிட்டேன் தெரியாத விஷையங்களை தேடிபிடிச்சு அதையும் கத்துக்கிட்டேன், எந்த விஷயமாக இருந்தாலும் தேடல் வேணும் ஒரு மனுஷனுக்கு அந்த தேடல் அது மூலமாக வருகிற அடையாளம் ஒரு நாள் பெயர் புகழ் பணம் அப்படின்னு உங்களை எல்லாரும் தெரிஞ்சிக்கிற மாதிரி கொண்டு போய் நிறுத்தும்” என்பார்.

ஆமாம், அப்படி ஓர் நாள் தான் படித்த பட்டதாரிகளை இனம்கண்டு அவர்களை இன்றைக்கு தன்னிகரற்ற நேர்மையான ஓர் தலைவரின் முன்னால் மற்றும் அவர் முன்மொழியும் வேட்பாளர்களாக மக்களின் முன்னால் அவர்களுக்கு சேவை செய்ய தங்கள் மேலும் அதே நேர்மை எனும் கேடையத்தை கொண்டு துணிச்சலுடனும் பெருமிதத்துடன் நிற்கிறார்கள்.