சென்னை பிப்ரவரி 03, 2022

வீட்டுக்குள்ளே பெண்களை பூட்டி வைக்கும் விந்தை மனிதர்கள் தலை கவிழ்ந்தார் – மகாகவி சுப்ரமணிய பாரதி.

விந்தை மனிதர்கள் தலை கவிழ மகளிர் தலை நிமிர துவங்கி ஆண்டுகள் பல கடந்து விட்டது.

தங்கள் வீட்டின் பெண்களை அரசியலில் ஈடுபடுத்தும் ஆண்கள் அவர்களின நிழலாக செயல்படுவார்கள் சாவி கொடுக்கப்படும் பொம்மைகளாக பெண்கள் இருந்த காலமெல்லாம் இனி இங்கே பலிக்காது அதுவும் மக்கள் நீதி மய்யம் தனில் மாநில அளவில் இருக்கும் பதவிகள் மட்டுமல்ல பகுதி கிளை பதவிகளில் பொறுப்பு வகிக்கும் மாதர் படை நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பெறும் உத்வேகத்துடன் கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகள், வயதில் மூத்த பெண்மணி, தம் வயிற்றில் வளரும் சிசுவுடன் களத்தில் நிற்கும் பெண்மணி என மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடுகிறார்கள்.

மகளிர் முன்னேற்றம் என்று வாய்ப் பேச்சு அளவில் மட்டுமே இருக்கும் கழகங்கள் மத்தியில் மகளிரின் திறன் மேம்பட நமது மக்கள் நீதி மய்யம் அதற்கான செயலில் இறங்கியுள்ளது சிறப்பு.

இங்கே நாங்கள் எழுதியிருப்பது சிலரை பற்றி மட்டுமே ஆயினும் போட்டியிடும் மகளிர் படையின் எண்ணிக்கை இன்னும் பெரிது.

குறித்து வைத்துக் கொள்ளலாம் இன்றைய நிகழ்வுகள் நாளைய வரலாறாக மாறும்.

மய்யம் மாதர் படை இதுவல்லவோ வெல்லும் படை.

https://www.facebook.com/100043569224844/posts/507568060705497/?d=n