கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கு அதன் தீர்ப்பு வழங்கப்பட்டது. சாதி பிரிவினை கொண்டு மனதில் வேற்றுமை காட்டி மனிதம் இல்லாத ஆணவம் கொண்டு கொலை செய்த கயவர்கள் எங்கும் எவ்வழியிலும் தப்ப முடியாது என இதுவரை விசாரித்த நீதியரசர் அவர்கள் சாட்சியங்களின் படி சட்டப்படி குற்றம் என நிரூபணம் செய்ததின் பொருட்டு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது வரவேற்கத் தக்கது என தயங்காமல் தன் நிலைப்பாட்டை எடுத்து வைக்கிறது மக்கள் நீதி மய்யம்.