ரேஷன் கடை ஆய்வு; திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் மதுரவாயில் உள்ள ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல் தொகுதி காரம்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி வார்டு எண் 150, மந்தவெளி தெருவில் உள்ள பொது விநியோக மையம் எண் FD011 ல் மாவட்டச் செயலாளர் திரு பாசில் தலைமையில் மாநில செயலாளர் திரு.சிவ இளங்கோ, வினோத், சஜீஷ், மாநில இணைச்செயலாளர் ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். காலை 8.30 மணிக்கு திறக்கப்பட வேண்டிய ரேசன்கடை 8.45 மணிக்கு மேல்தான் திறக்கப்பட்டது. கதையில் சுகாதாரம் சரியில்லை. சீரமைக்கப்படாத கட்டிடம் என்பதால் சுவர்கள் ஈரமாகவும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளது. பொருள்கள் மழையில் நனையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடை ஊழியர் முறையிட்டு துறை ரீதியான முறையான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப ஒரு சிறிய ஆய்விலேயே இவ்வளவு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்றால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடையிலும் ஆய்வு மேற்கொண்டால் பல ஆயிரம் குறைகளும், புகார்களும் வரும் என்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. தலைவர் கமல்ஹாசனின் வழியை பின்பற்றி தமிழகமெங்கும் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ரேஷன்கடை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் களத்தில் நின்று மக்களின் குரலாக ஒலிப்பார்கள் – ஊடகப்பிரிவு, மக்கள் நீதி மய்யம்.