ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றுவோம் என சொல்லி வாக்குகளைப் பெற்ற திமுக அரசு தொடர்ச்சியாக ஆசிரியர் கைவிட்டுவருவது கண்டனத்திற்குரியது.

10 ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் தங்களை நிரந்தர ஆசிரியர்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு தொடர்ச்சியாக போராடி வந்தவர்களை, மூன்று நாட்களுக்குப் பிறகு அழைத்து பேசினாலும் அரசு அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி தரவில்லை. இத்தனைக்கும் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பின் கீழ் அறிக்கை 181 இல் திமுக “பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள் இசை ஆசிரியர்கள் உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம்” என சொல்லியுள்ளது. வெற்றிக்கு ஆசைப்பட்டு பொறுப்பின்றி வாக்குறுதிகள் கொடுத்து விட்டு நிறைவேற்றும் பொறுப்புக்கு வந்ததும் நடைமுறை சிக்கல்களை பூதாகரமாக்கி காட்டுவது விடியலை நோக்கி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் அரசுக்கு அழகல்ல என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறது மக்கள் நீதி மய்யம்.