சென்னை, மார்ச் 16, 2022

கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை – சேலம் இடையே இருக்கும் 277 கிலோமீட்டர் தூர சாலையை 8 வழி பசுமைச்சாலையாக மாற்றும் திட்டத்தை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்மானிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது, இதற்காக போதுமான நிலங்களை கையகப்படுத்தும் அரசாணையும் வெளியிட்டது. அதனை ஒப்புக்கொள்ளாமல் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர், மேலும் மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்த திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள், விவசாயிகள், மக்கள் நீதி மய்யம் பூவுலகின் நண்பர்கள், டாக்டர் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூர்யபிரகாசம் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் 2019 ஆம் ஆண்டில் ஏப்ரல் 8 ஆம் தேதி இத்திட்டம் செயல்படுத்தினால் உண்டாகும் விவசாய நிலங்களை மற்றும் இயற்கை வளங்களை இழக்க நேரிடும் அபாயம் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு எந்த வித நிபந்தனையும் இன்றி இந்த எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் இதுவரை கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் அதன் உரிமையாளர்களிடமே 8 வார கால அவகாசத்திற்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இது தொடர்பாக இந்த உத்தரவினை எதிர்த்து மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீடு மனு மீதான விசாரணையை துவக்கிய உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனெரல் துஷார் மேத்தா “சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும் என்றால் நிலங்களை கையகப்படுத்தி இருந்தால் மட்டுமே அனுமதி பெற முடியும் எனவும் 2006 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க விதிகளின்படி நிலங்களை கையகப்படுத்த சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை என்று வாதிட்டார்.

தொடர்ந்து எதிர்மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக் கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் எதிர்தரப்பினரிடம் மேல்முறையீடு தொடர்பாக தங்களது வாதங்களை எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஒத்தி வைத்தனர்.

கடந்த ஆண்டில் (2020) இல் மேற்கண்ட விரைவுசாலையை நிறைவேற்ற மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைக்கு எந்த விதமான தடைகளையும் விதிக்க முடியாது எனவும் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு செல்லாது என்றும் நீதிபதிகள் கண்வில்கர் மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் தீர்ப்பினை வழங்கினார்கள், மேலும் இதுவரை நிலங்களை கையகப்படுத்திய நடவடிக்கை மட்டும் செல்லாது எனவும் இதற்கான புதிய அரசாணையை வெளியிடுமாறு உத்தரவிட்டது.

இத்திட்டத்தினை செயல்படுத்தினால் பேரிழப்பு ஏற்படும் என்றும் இதில் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒப்பந்தத்தில் அதில் ஆயிரக்கணக்கான கோடிகள் கமிஷனாக எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கிடைக்கும் என்று அப்போது குற்றம் சாற்றிய அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக திரு மு.க ஸ்டாலின் அவர்கள், மேலும் இது தொடர்பாக நான் சட்டமன்றத்தில் எதிர்ப்புகுரல் எழுப்பினேன் என்றும் கூறியவர் முதல்வர் ஆனதும் கடிதம் ஒன்றை பிரதமருக்கு அனுப்பியுள்ளார் என்றும் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கிறது. ஆயினும் தற்போது இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்கிற முனைப்பில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் பணிகளைத் தொடங்கியது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI)

மக்களின் தேவைகள் என்ன, அதன் ஊடாக நாட்டின் வளர்ச்சி எவ்விதம் இருக்க வேண்டும் அந்த வளர்ச்சி எந்த வாழ்வாதாரத்தையும் சிதைத்திடாமல் செயல்படுத்துதல் வேண்டும் எனவும் அப்படி அத்திட்டம் பெருமளவு அழிவினை தரும் என்றால் சிறிதும் யோசிக்காமல் திட்டத்தினை கைவிடுதலே சாலச்சிறந்தது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தெளிவாக தெரிவித்து உள்ளார் மேலும் இது தொடர்பாக கட்சியும் இருபக்க அறிக்கையினையும் வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

நான் முன்னேற்றத்தை நோக்கி நடப்பவன் நான் இருந்த தொழிலிலேயே அதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள் முன்னேற்றத்தை நோக்கி நடப்பதில் மிகுந்த ஆர்வத்தை மற்றவர்களை காட்டிலும் ஒரு படி அதிகமாக ஆர்வம் காட்டுபவன் என்பது நிரூபணம். இப்பொழுது என்னை ஒரு இடதுசாரியாக காட்டுவதோ இந்த எட்டு வழிச்சாலை வேண்டாம் என்று சொல்வதினால் நான் இடதுசாரி அல்ல, எல்லாவற்றையும் மாற்றிக்கொண்டு வரலாம், புதிது புதிதாக வேண்டும் என்று ஆனால் நம்மை பெற்ற தாய் தந்தை அப்படியே தான் இருக்க வேண்டும் அவர்களை நாம் எக்காலத்திலும் மாற்றக் கூடாது அப்படி மாற்றினால் மொத்த மரபணுக்கள் மாறிபோகும் அபயம் உண்டு. இத்தனை வருடங்கள் சாலைகள் போடப்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைக்கப்பட்டு தற்போது அது இரண்டு வழிச்சாலையாக இருக்கிறது வேண்டுமானால் அதிலேயே மாற்றங்கள் செய்தால் நன்று. அதை விட்டுவிட்டு புதிதாக வேறு ஒரு சாலையை அமைத்தே தீருவேன். அதில் எத்தனை மலைகள் வந்தாலும், எத்தனை பள்ளிகள் வந்தாலும் எத்தனை விளைநிலங்கள் வந்தாலும் எத்தனை விவசாயிகள் இறந்தாலும் பரவாயில்லை எனும் வாதங்கள் ஏற்க கூடியதாக இல்லை. பூமிக்கு அடியில் தங்கம் வைரங்கள் புதைந்து கிடைக்கலாம் அவற்றை இப்போது எடுக்க அவசியமில்லை ஏன் என்றால் பூமிக்கு மேலே விவசாயம் நடந்து கொண்டு இருக்கிறது ஒருவேளை அது நீண்ட காலங்களுக்கு பிறகு விளைய வாய்ப்பில்லை எனும்போது அந்த தங்கத்தினையும் வைரங்களையும் எடுத்துக் கொள்ளலாம். விவசாயத்தை அழித்துவிட்டு அரிசியை சமைத்து உண்ணாமல் வைரத்தை உண்ண முடியாது அப்படியே அதைச் சாப்பிட முடியும் என்றாலும் அவற்றை பொடியாக்கி மட்டுமே உண்ண முடியும் அது தற்கொலைக்கு சமமாகும் என ஆணித்தரமான வாதத்தினை முன் வைத்துள்ளார்.

சேலம் – சென்னை எட்டு விரைவுவழி பசுமைச்சாலை அமைப்பது தொடர்பாக தனது கட்சியின் சார்பாக தொடர்ந்து சட்டப்பேரவையின் விவாத்தின் போது மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்புகளில், 2019 பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போதும் எதிர்ப்புகளை பதிவு செய்து வந்ததாக குறிப்பிடும் திரு ஸ்டாலின் அவர்கள் இதில் என்ன மாதிரியான எதிர்ப்பினை தற்போது தமிழகத்தை ஆளும் திமுக அரசு தெரிவிக்கப் போகிறது என்றும் அல்லது இதற்கான ஒப்புதலை தெரிவிக்குமா என்றும் கவனிக்கப்பட வேண்டும்.

https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=&cad=rja&uact=8&ved=2ahUKEwjTxvuT2tz2AhVasFYBHQpFDecQFnoECAsQAQ&url=https%3A%2F%2Fwww.newindianexpress.com%2Fstates%2Ftamil-nadu%2F2021%2Fjan%2F05%2Fmnm-strongly-opposes-salem-chennai-expressway-projectkamal-haasan-2245590.html&usg=AOvVaw3WFNz4DvFvmruIyXWn8YSk

Follow-Up