கடந்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலில் ஜெயித்த பின்னர் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றப்படும் ஏன் என்றால் நடக்கவிருப்பது கழக ஆட்சி, ஏன் என்றால் நான் கலைஞர் மகன் என்று மூச்சுக்கு முன்னூறு முறை மைக்கை பிடித்து பேசியது அவர்களுக்கு வேண்டுமானால் மறந்திருக்கலாம். இதுவரை இப்படி வாய்க்கு வந்தபடி நூற்றுக்கணக்கில் அளித்த வாக்குறுதிகள் ஆழ்கிணற்றில் போடப்பட்ட கற்களாக தேடக் கிடைக்காமல் காணமல் போனது மட்டுமே மிச்சம்.

எந்த இலவசங்களும் இல்லை, தொலைநோக்கு பார்வை கொண்ட தன்னிறைவு திட்டங்கள் சுற்றுச்சூழல் காக்கும் திட்டங்கள், இலஞ்சம் முறையற்ற நிர்வாகம் என எந்த பிசகுகள் இல்லாமல் நேர்மை எனும் முக்கிய கவசத்தினை கொண்டு ஒற்றைக் காசு கூட கொடுக்காமல் தேர்தலைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் வேண்டுமானால் தோல்வியைத் தழுவி இருக்கலாம், ஆனால் பெற்ற ஒவ்வொரு வாக்குகளும் மய்யம் மீது மக்கள் வைத்த நம்பிக்கை. மேலும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் மய்யத்தின் வாக்குறுதிகளை அப்படியே நகலெடுத்து சொன்னது இன்னும் வேடிக்கை.

இரட்டைத் தலைமை கொண்ட கட்சி அதிமுக நீயா நானா என்று நேரெதிர் திசையில் அந்த வண்டியை செலுத்த முயற்சித்து நிற்கையிலும் இதுவரை கணக்கு வழக்கில்லாத முறையற்று சேர்த்த சொத்துகளையும் காத்துக்கொள்ளவே போராடும் பெயரளவிற்கு மட்டுமே எதிர்க்கட்சி.

கொடுத்த சீட்டுக்களை பெற்றுக்கொண்ட கூட்டணிக் கட்சிகள் அதன் தலைவர்களை காணும்போது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் நினைவுக்கு வந்தால் என்ன செய்ய, அதனால் ஆளும் கட்சி போடும் அரைகுறை திட்டங்களை ஆஹா ஓஹோ என ஒவ்வாமையுடன் ஒப்புக்கொள்வார்கள். திட்டங்கள் ஏன் நிறைவேற்றப்படவில்லை எனக் கேட்டால் அதற்கு சுற்றி வளைத்து எதிர்க்கேள்வியை கேட்டு அமைதி காப்பார்கள்.

திமுக அரசின் இரண்டாவது பட்ஜெட், இதிலும் பற்றாக்குறை தான், சொன்னதை சொல்லிக்கொண்டே இருப்பது கிளிப்பிள்ளை என்பார்கள் ஆம் இவர்களும் பல வருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கும் அதே வாக்குறுதிகள் தான் அதே பட்ஜெட் தான் என்ன வித்தியாசம் என்றால் அதை அச்சிட்ட காகிதங்கள் மட்டுமே புதிது.

எங்களுக்கு தேவை வெற்றி மட்டுமல்ல மக்களின் நலனே எங்களின் தலையாய கொள்கை எனும்படியாக எதிர்க்கட்சிகள் சொல்லத் தவறியதை மக்கள் நீதி மய்யம் நிதமும் அரசுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கிறது ; உணர்த்திக்கொண்டே இருக்கும். மய்யம் கைகளில் விரைவில் ஆட்சியும் அதிகாரமும் வரும் எனும் நம்பிக்கையில் நாளை நமதே எனும் முழக்கத்துடன் அதே நேர்மையுடன் தலைவர் திரு கமல்ஹாசன் இந்த அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிக் கொண்டே இருப்பார்.

இன்னமும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அதற்கான எந்த அறிவிப்பும் இன்றைய நிதி நிலை அறிக்கையில் சொல்லப்படவில்லை.

 1. மகளிர் உரிமைத் தொகை
 1. கேஸ் மாநியம் மாதம் 100
 2. முதியோர்கள் உதவித் தொகை உயர்வு
 3. ஆசிரியர்கள் பணியிடம் நிரப்புதல்
 4. போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வுதியம்
 5. பெண்களுக்கான இலவச தங்கும் விடுதி
 6. மின்சார கணக்கீடு மாதம் ஒரு முறை மாற்றியமைப்பு
 7. டாஸ்மாக் கடைகள் குறைப்பு
 8. TAR பிறகு அறிவிக்கப்படும்
 9. உள்ளாட்சிகளுக்கான நிதி ஓதுக்கீடு
 10. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு
 11. டீசல் விலை குறைப்பு
 12. கல்விக் கடன் தள்ளுபடி
 13. மண் குவாரி அரசே ஏற்று நடத்துவது
 14. e-பேருந்துகள்
 15. e-டெண்டர்கள்