நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய ஐரோப்பிய அமைப்புகளை நோக்கிய உக்ரைனின் நகர்வை ரஷ்யா நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. உக்ரைன்  மேற்கத்திய நாடுகளின் கைப்பாவை என்றும் அது ஒருபோதும் முழுமையான நாடாக இருக்கவில்லை என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எல்லைப்புற சர்ச்சையும் இருந்து வருகிறது. மேலும் உக்ரைனில் ஒரு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் வசித்து வருகின்றனர், இதனால் அவ்வப்போது உக்ரைனுக்கும் அக்கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது உண்டு அந்த நேரங்களில் அக்கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவுவதும் உண்டு.

இதனிடையே ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவிக்கத் தொடங்கியது. உக்ரைனுக்கு ஆதரவாக அமேரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பக்கபலமாக உள்ளன.

இதன் தொடர்ச்சியாக உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் பெரிய நகரமான கார்கியாவில் ரஷ்யா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் உள்ள கல்வி பல்கலைகழகங்களில் இந்தியாவைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்திவருவதால் உடனடியாக அங்கிருந்து மாணவர்களை அவரவர் நாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் நடந்து வருவதை தொடர்ந்து இந்திய அரசு அதற்கான ஆயத்தங்களைச் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தது.

எனினும் இந்தியாவின் நடவடிக்கைகள் அத்தனை திருப்திகரமாக இல்லை எனவும் சர்ச்சை நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் இச்சூழலில், தன்னுடன் இணக்கமாக நட்புறவு பேணும் தமது அண்டை நாடுகளிடம் உக்ரைன் உதவி கோரியதால் அங்கிருந்து வெளியேறும் மக்களை வரவேற்று தங்கள் அண்டை நட்புறவு நாடுகளில் அனுமதிக்கபட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று உக்ரைன் அரசு, அங்கே பயின்று வரும் இந்திய மாணவர்களை சிரமம் பாராமல் அங்கிருந்து சுமார் 11/14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று விடவும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அப்படி அங்கே சென்று பாதுகாப்பாய் தங்கி இருந்தவர்களை ஒவ்வொரு கட்டமாக இந்தியா தனி விமானங்களை அனுப்பி வைத்து அங்கிருந்து மாணவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வருகின்றனர். இங்கே தான் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். அது EVACUATION எனும் ரீீதியில் ஆளும் மத்திய அரசு தொடர்ந்து சொல்லி இங்கே நாளிதழ்கள், தொலைக்காட்சிகளின் வழியாக பரப்பி வருகின்றனர்.

ஒரு ஆளும் அரசு தாங்கள் நாட்டுக்கு செய்யும் நலத்திட்டங்களை தாரளாமாக விளம்பரங்கள் செய்யலாம் அதில் தவறேதும் இல்லை. ஆயினும் போர்முனைக்கு சென்று மாணவர்களை மீட்டுக் கொண்டு வருவதாக பொய்யான தகவல்களை கொஞ்சமும் தயங்காமல் நடக்கும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக வாக்கு அரசியல் செய்யும் சுயநல அரசியல் நாடகத்தை என்னவென்று சொல்வது. மீட்கப்படவேண்டியவர்களை வேறொரு பாதுகாப்பான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதும் பின்னர் அந்த நகரங்களில் இருந்து விமானங்கள் மூலம் அவர்களை மீட்கப்படுவது/வெளியேற்றப்படுவது (EVACUATION) அல்ல மாறாக அது ட்ராவல் அரேஞ்மென்ட் (TRAVEL ARRANGEMENT) என்பதே சரி.

“போர் முனையில் சென்று மீட்பதற்கு பெயர்தான் EVACUATION,  பக்கத்து நாட்டுக்கு வர சொல்லி அங்கிருந்து விமானத்தில் அழைத்துக்கொண்டு வருவதற்குப் பெயர் TRAVEL ARRANGEMENT  அதற்குத்தான் ஒவ்வொரு விமான நிலையத்திலும் மலர் கொடுத்து வரவேற்பு”

அதிமுக்கியமான வருத்தம் அளிக்ககூடிய செய்தி என்னவென்றால் நடத்தப்படும் தாக்குதலில் ஹைதராபாத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் குண்டடிபட்டு உயிரிழந்துள்ளார். மேலும் பலர் கார்களில் பயணம் மேற்கொண்டு உயிர்தப்பி வருகையில் நடந்த தாக்குதலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அங்கிருந்த ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவரிடம் வேதனையளிக்கும் தகவல் ஒன்றை அளித்திருப்பது ஒரு நாட்டின் அரசு இயந்திரம் பொய்களை தொடர்ந்து சொல்லி வருகிறது என்பது உதாரணம். தாக்குதல் நடந்துகொண்டிருந்த வேளையில் மாணவர்கள் தப்பி வருவதற்கு முன்னதாக அங்கிருந்த இந்திய தூதரகம் காலி செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது என்பதே அதிர்ச்சியளிக்கும் தகவல்.

அதற்கு எடுத்துக்காட்டாக இங்கே தொகுக்கப்பட்டடுள்ள காணொளிகள் மற்றும் செய்திகள் உங்கள் பார்வைக்கு.

“இத்தகைய போர்க்கால இக்கட்டில் தங்கள் உயிரினை காத்துக் கொள்ள வேண்டி உணமையாய் வெகுவேகமாய் செயல்பட்டு மாணவர்களை மீட்கும்படி மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது. மேலும் இதில் எந்த விதமான அரசியலும் செய்யாமல் பதட்டத்தில் அச்சத்தில் இருக்கும் இந்திய மாணவர்களின் அச்சத்தை போக்கி தைரியம் அளித்து அவர்களை பாதுகாப்பாய் இந்தியா வந்தடைய செய்யுமாறு கேட்டுக்கொள்கிறது மய்யம்.”

“பதட்டமும் உயிர் இழப்பு உண்டாக்கக்கூடிய இந்த போர்க்காலத்தில் நாங்கள் விரைவில் மீட்கப்படவில்லை எனில் நாங்கள் கொல்லப்படுவது உறுதி” – உக்ரைன் நாட்டில் உள்ள சுமி மாநில கல்லூரியில் பயிலும் இந்திய மாணவர்கள் அவசரச் செய்தி. (நன்றி : NDTV)

நடந்து வரும் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக உயிருக்குப் பயந்து பங்கர்கள் உள்ளே பீதியுடன் இருக்கும் இந்திய மாணவர்களை விட அதிமுக்கியமான சந்திப்பு ஜக்கி வாசுதேவ் உடன்

போர்ச்சூழலில் உயிருக்கு பயந்து சுரங்கங்களில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள்
வணக்கம் வைத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் – கண்டுகொள்ளாத இந்திய மாணவர்கள்

“இது போன்ற அவசரகால சூழல்களில் வெளிநாடுகளில் இருந்த இந்தியர்களை மீட்டுவந்த தருணங்கள் எந்த வித ஆர்ப்பாட்டமும் விளம்பரங்களும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பதை விவரிக்கும் சுகாசினி ஹைதர் எனும் பத்திரிகையாளரின் கட்டுரை. ஆனால் இப்போதிருக்கும் இந்த மத்திய அரசு இதை அரசியலாக்கி நடக்கும் சில மாநிலங்கள் தேர்தலின் வெற்றிக்கு உதவும் யுக்தியாக உபயோகிக்க அதனை வாக்குகளாக மாற்றப் பார்க்கிறர்கள்.”

தென்னிந்திய மாணவர்கள் என்றால் ஒரு மாதிரியும் வட இந்திய மாணவர்கள் என்றால் ஒரு மாதிரியும் பாகுபாடு காட்டப்படுவதாகவும்,வட இந்திய மாணவர்கள்,நாங்கள் தான் முதலில் செல்வோம் நீங்கள் பிறகு வாருங்கள் என மிரட்டுவதாகவும் 2 நாட்களாக போலந்து எல்லையில் சிக்கியுள்ள தன் மகன் அவனது நண்பர்கள் இப்படி சிரமப்படுவதாகவும் அவர்களுக்கு பிறகு எல்லைக்கு வந்த பிற மாணவர்கள் இந்தியா வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
இன்று மதியம் தான் அவர்களுக்கு விமானம் ஏற்பாடு ஆகியிருகிறது.
உண்மையில் இது வருந்தத்தக்கது தான்.
https://twitter.com/paulblueme/status/1499723067769036800?s=21
12000 இந்தியர்கள் உக்ரேனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று பிரதமர் மோடி கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்று.
https://twitter.com/queen_luccy/status/1499640874992807937?s=21