சேலம் மார்ச் 08, 2022
பிறந்தது முதல் மணமுடிக்கும் வரை தந்தை தாயை சார்ந்திருப்பது, மணமான பின் கணவன், பிள்ளைகள் என பிறரையே சார்ந்திருக்கும் காலங்கள் காணாமல் போனது. சைக்கிளில் பயணிக்கவே தடை போட்ட நொடிகள் புறம் தள்ளப்பட்டு இன்றைக்கு விண்வெளி பயணம் என தங்கள் அதீத திறமைகளை கொண்டு ஒவ்வொரு துறைகளிலும் ஜொலிக்கும் மகளிரை போற்றும் அவர்தம் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளும் நாளாக கொண்டாடும் மகளிர் தினம்.
மக்கள் நீதி மய்யம் என்றும் அரசியலில் ஈடுபடும் மகளிர்க்கு அவர்தம் நற்பணிகளை முன்னெடுத்துச் சொல்லி பெருமைகொள்ளும். ஆணுக்குப் பெண் சமம் காண் என்பதே மேலோங்கிய கருத்தும் எண்ணமும் என்று உறுதியாகச் சொல்லலாம்.
நாமக்கல் மேற்கு மாவட்டம், குமாரபாளையம் தொகுதியில், மக்கள் நீதி மய்யம், மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் சார்பில் உலக மகளிர் தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது மேலும் டாக்டர் E தங்கவேலு (மோனிகா டயபெடிக்ஸ் சென்டர், ஈரோடு) அவர்கள் தலைமையில் மகளிர் நலம் எனும் தலைப்பில் கருத்துரை நிகழ்வும் சிறப்புற நடைபெற்றது.
மதுரை மண்டலத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்