கோவை ஏப்ரல் 04, 2022
5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்காக காத்திருந்தார் போல் திடீரென சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தியது கண்டு மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர் மக்கள். இனி நாளுக்கு நாள் விலை உயருமோ என்றும் அச்சத்துடனே வாழும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு வருவது பெரும் வேதனை தரக்கூடியது.
சாதி மாத அரசியலை மட்டுமே தனது பிரதான கொள்கையாக கொண்டும் பெரும்பாலான அரசு துறைகளின் இயங்கக்கூடிய நிறுவனங்களை தனியார்மயமாக மாற்றிக்கொண்டு வரும் மத்திய ஆளும் பாஜக அரசின் மெத்தனப்போக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தாமல் ஓங்கி உயர்ந்த மரங்களின் எட்டாகனியைப் போன்றே மக்களை வஞ்சித்து வருகிறது என்றால் மிகையாகாது.
இதனை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் மூலமாக கோவை மாவட்ட நிர்வாகிகள் சிலிண்டரின் படத்தினை அச்சிட்டு அதற்கு நூதன முறையில் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதாக கோவை நகர் முழுதும் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளன.
அதே போன்று மக்கள் நீதி மய்யம் மதுரையிலும் சமையல் எரிவாயு சிலிண்டரை அச்சிட்டு அதற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
சமையல் எரிவாயு விலையை உயர்த்தியது தொடர்பாக தனது கண்டனத்தை தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார்.
மக்கள் நீதி மய்யம் சார்பாக சென்னை பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் அருகில் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் நாளன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் கவனிக்கப்படவேண்டிய இன்னுமொரு முக்கிய விஷயம் என்னவென்றால் சென்ற ஆண்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் மானியத் தொகையாக ரூபாய் 100 தருவதாக வாக்குறுதி அறிவித்து இருந்தது அதை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை, அதற்கான மாற்று என்னவென்றும் சொல்லப்படவில்லை. விடியல் என்று வருமோ ?