நிறைமாத கர்ப்பிணிகள் மகப்பேறு காலத்தில் மருத்துவமனையை சென்றடைய பொது வாகனத்தை (பேருந்து) உபயோகிக்க முடியாது, வசதி படைத்தவர்கள் சொந்த வாகனமோ அல்லது வாடகைக்கு என எந்த வாகனமும் பயன் படுத்தமுடியும். நடுத்தர வர்க்கத்தினர் ஒரே அவசர ஊர்தி ஆட்டோக்கள் மட்டுமே. அதுவும் பேறுகால நிறைமாத கர்ப்பிணிகள் எந்த நேரத்திலும் பிரசவத்தினை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் அதுவும் ஒரு பைசா செலவுமின்றி முற்றிலும் இலவசமாக வீடு முதல் மருத்துவமனையை சென்றடைய இலவச ஆட்டோ பயண சேவையை நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் நல்லாசியுடன் துவக்கி உள்ளார் மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்க அணி மாவட்ட அமைப்பாளர் திரு சிவாஹாசன் அவர்கள்.

அவருடைய மனிதாபிமான இந்த முன்னெடுப்பை வாழ்த்துகள் உரைத்து உளமார நன்றி கூறுகிறது மக்கள் நீதி மய்யம் மய்யத்தின் உறவுகள் மற்றும் மய்யத்தமிழர்கள்.