சென்னை ஏப்ரல் 23, 2022

நாளை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் பங்கேற்று கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழி எடுத்து, உரையாற்றும் நிகழ்வு!

நாடு முழுவதும் நாளைய தினம் தேசிய பஞ்சாயத் ராஜ் நாளாக முன்னெடுக்கப்பட இருக்கிறது. தமிழகமெங்கும் சிறப்பு கிராம சபைக்கூட்டங்கள் நடக்கவிருக்கிறது. அதிகாரங்களை பரவலாக்கும் பஞ்சாயத் ராஜ் சட்டம் குறித்தும் கிராம சபைகள் குறித்தும் பரவலாக மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

மாதிரி கிராம சபைகள் நடத்தியும் கிராம சபைக் கூட்டத்தில் நேரிடையாக பங்கேற்றும் கிராம மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் பஞ்சாயத்து ராஜ் தினமான நாளை (24.04.2022) காலை 10.00 மணியளவில் ஜூம் காணொளி வாயிலாக கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழியை எடுத்து உரையாற்றும் நிகழ்வு நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் அதிகாரபூர்வ ஊடகப்பிரிவு செய்திகுறிப்பினை வெளியிட்டுள்ளது.