சென்னை ஏப்ரல் 22, 2022

ஆண்டுதோறும் நடைபெறவேண்டிய கிராமசபைகள் பலவருடங்களாக நடைபெறாமல் இருந்தது. அப்படி ஒன்று இருக்கிறது என்பதை தமிழகத்தின் ஆகப் பெரிய கட்சிகள் என்று தங்களை பெருமையாக சொல்லிக் கொள்ளும் கழகங்களும் அதை முன்னெடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர் என்பதே உண்மை.

மக்கள் நீதி மய்யம் உருவான பின்னர் அதன் அடுத்த கட்டமாக கிராமசபைகள் பற்றிய தகவல்களை இடைவிடாமல் தொடர்ந்து மக்களிடையே அறிவித்து அதில் பங்கும்பெற்றும் காண்பித்தது முக்கியமான ஓர் அரசியல் செயல்பாடாகும்.

ஒவ்வொரு தேவைகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரையோ தேடிக்கொண்டு இருக்க முடியாது எனவே உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள நிர்வாகத்தின் மூலம் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதிகளை முறையாக எந்தவித ஊழல்கள் இல்லாமல் நற்திட்டப்பணிகள் செய்து கொள்ளலாம். அதன்படி செய்து முடிக்கப்பட்ட பணிகளின் மதிப்பீடு அதற்கான செலவுகள் என்ன என்பதை பொதுமக்களின் முன்னிலையில் தெரிவித்தல் மற்றும் மக்களின் நலனுக்கு பாதகமான எதுவாக இருந்தாலும் அவற்றை தீர்மானங்கள் வரைந்து அவற்றை நிறைவேற்றாமல் இருக்கக் கூடிய பெரும் அதிகாரம் கொண்டதே கிராமசபை.

நமது தேசத்தந்தை மகாத்மாவின் முதல் எண்ணமே கிராமியமே நாட்டு நலனுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் என்பதே.

இதுவரை அதிகாரப்பூர்வமாக வருடத்திற்கு குடியரசு தினம், தொழிலாளர்கள் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் தமிழகத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம் நான்கு நாட்களில் நடைபெற வேண்டும் என்ற விதியை சற்று நீட்டித்து கிராமசபைகள் உள்ளாட்சி தினமான நவம்பர் 1 மற்றும் தண்ணீர் தினமான மார்ச் 22 ஆகிய இரண்டு கூடுதல் நாட்களை சேர்த்து இனி 6 நாட்களாக நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம்.

மக்களுக்கு இப்படி கிராமசபைகள் இருப்பது தெரியாமலே போய்விடாமல் அப்படி ஒன்று இருப்பதை மக்களிடையே பரப்பசெய்து விழிப்புணர்வையும் அதில் கலந்து கொள்வதையும் முக்கியம் என்று உணர்த்தியது மக்கள் நீதி மய்யம் மட்டுமே.

https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhassan-makkalneedhi-maiam-gramasabha-video-conferencing/