மதுரை ஏப்ரல் – 23, 2022
கைக்குள் உலகம் எனும்படியாக அலைபேசி அதனுடன் இணையம். ஒரே சொடக்கில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள எல்லாம் நம் கைகளில் வந்து விழுவதை எல்லாம் சுருங்கி விட்டது.
எனினும் சிலவற்றுக்கு மட்டும் எந்த மாற்று வழியும் இல்லாமல் இருக்கும். அதில் வெகு முக்கியமான ஒன்று மலம் அள்ளுவதும் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி அடைப்பு நீக்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.
அயல்நாடுகளில் இப்படி எல்லாம் நடக்குமா நடக்காதா என்று ஆராய்ந்து கொண்டிருப்பதை விட சரேலென பறக்கும் அதிவேக ராக்கெட்டுகள், கனரக வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆயுதங்கள் பேட்டரிகள் கொண்டு ஓடும் இருசக்கர வாகனம் மற்றும் கார் என சுற்றுப்புற சூழ்நிலை காரணமாக உற்பத்தி செய்தல் போன்றே சாக்கடை அடைப்பு நீங்க மிகச்சரியான ஓர் உபகரணங்கள் இல்லாமல் போனது நம்மை நாமே இகழ்ந்து கொள்ளும்படியான நிகழ்வுகளே இத்தைகைய எதிர்பாரா மரணங்கள்.
தூய்மைப் பணியாளர்களின் உயிர் ஒன்றும் கிள்ளுக் கீரைகளோ அல்லது கறிவேப்பிலை போன்றோ அல்ல. அவர்களை நம்பி மனைவி பிள்ளைகள் என உற்றார் உறவினர்கள் உண்டு. குடும்பத்தின் தலைவன் ஒருவர் இறந்து போகிறார் என்றால் அந்தக் குடும்ப அமைப்பே முற்றிலுமாக சிதைந்து போகும். அது அதற்கடுத்த தலைமுறைகள் உடனே தொடர்ந்து வருவதற்கும் வாய்ப்பு தானாக தகர்ந்து போய் விடும்.
கரன்சிக்கள் எண்ணிக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்கள் சம்பந்தபட்ட துறையின் அதிகாரிகள் மூலமாக இதற்கு மாற்றாக என்னென்ன தேவை என்பதும் உடனடியாக ஆலோசிப்பது அவசியம்.
இயற்கைக்கு மாறாக ஏற்படும் உயிர் பலி கரும்புள்ளிகள் ஆகிவிடும்.
விரைவில் இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக அதையும் போர்க்கால அடிப்படையில் செய்து தருவது மட்டுமே மறைந்த அந்த மூன்று பேருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலிகள்.