தமிழகமெங்கும் மட்டுமல்ல உலகெங்கிலும் தனக்குரிய அபிமானத்தை கொண்ட கோடிக்கணக்கில் உள்ள ரசிகர்கள் தொண்டர்கள் மட்டுமல்லாது எவரையும் கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட திரு கமல்ஹாசன் அவர்கள் தனக்கென உருவான ரசிகர் மன்றத்தினை துணிந்து கலைத்துவிட்டு அதனை நற்பணிகள் செய்யும் இயக்கமென மாற்றியதில் தனது தனித்தன்மையை உலகிற்கு உணர்த்தச்செய்தவர்.

தனது படங்கள் வெளியாகும்போது கட் அவுட்களுக்கு பாலும் தேனும் பன்னீரும் வேண்டாம் என வலுவாய் மறுத்து பதிலாக நீங்கள் எனக்கு ஒரு உன்னத பணியினை செய்து தரவேண்டும் என்று வாய்மொழி சத்தியத்தை தனது ரசிகர்களிடம் பெற்றுக்கொண்டார்.

அந்தச் சத்தியம் என்னவெனில் “எனது பிறந்தநாளிற்கு படம் வெளியீடன்று என அந்த நாட்கள் மட்டுமின்றி உங்களுக்குச் செய்யும் எண்ணம் எந்த நாளில் வந்தாலும் உங்களது குருதியை தானமென தாருங்கள் உயிர்கள் காக்கப்படும் மரணம் தவிர்க்கப்படும் என்றும் உண்ண உணவும் தாருங்கள் பசிப்பிணி தவிர்க்கப்படும் என்றும் எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக நான் சொல்வதை தட்டாமல் செய்து முடிக்கும் என் ரசிகப் பெருமக்களின் அன்பில் நெகிழ்ந்து போய் நிற்கும் நான் இதுவரை என் குருதியை தந்து வந்தேன், என்னை வரவேற்று என் திறன் போற்றி என் நலன் உணர்ந்து உச்சி முகர்ந்து தன் வீட்டினில் ஓர் உறுப்பினராக உயிராய் மதித்த மக்களின் அன்பால் என் உடலையே தானமாய் தருகிறேன் மண்ணுக்கு போகுமோ அல்லது பிடி சாம்பலாய் மாறுமோ என்று இல்லாமல் மருத்துவப் படிப்பிற்கு உறுதுணையாக என்னுடல் விளங்கட்டும் என்று எழுதித் தந்துவிட்டேன் என்னையே.” என்பதாய் உடல்தானம் செய்தது தெள்ளத்தெளிவாக விளங்கி நிற்கிறது.

தன்னையே தந்த தலைவனின் வழியில் பின்பற்றி வரும் நம்மவர் ரசிகர்களும் மய்யத் தொண்டர்களும் தவறாமல் அவ்வப்போது தானமென தங்கள் குருதியையும், கண்களையும் இன்னும் பலர் அவர் போல் உடல் தானமும் தந்து நிற்கிறார்கள் : அவர்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி கரம் குவித்து உளமார வாழ்த்தி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள் மட்டுமில்லாது பெருமிதத்தோடு சொல்லியும் நிற்கிறது தன்னிகரற்ற தலைவனைக் கொண்ட மய்யத்தின் தொண்டர்கள் என்று.

https://youtube.com/shorts/5F1bFtubAbY?feature=share