சென்னை, மே 1, 2022

ஒவ்வொரு நாளும் உத்வேகம் கொண்டு சளைக்காமல் நற்பணிகள் செய்துவருவது நம் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள்.

வடசென்னை மாவட்டம் பெரம்பூர் அடுத்த திருவிக நகரில் உள்ள மக்கள் நீதி மய்யம் பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தண்ணீர் பந்தல் அமைத்து சுத்தமான குடிநீர், மோர், வெள்ளரிக்காய் தர்பூசணி என பழங்களும் இலவசமாக அளிக்கும் விழா மற்றும் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் சேர்க்கை முகாமும் தொடர்ந்து மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வினை தலைமையேற்று நமது கட்சிக் கொடியினை ஏற்றி வைத்துப் பேசிய மாநில செயலாளர் திரு சிவ இளங்கோ அவர்களும் மேலும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்த சென்னை மத்திய வடக்கு மாவட்டம் செயலாளர் திரு.V.உதயகுமார், முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்கு உறுதுணயாக விளங்கிய தொகுதி நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துகள்.