சென்னை மே 06, 2022

முறையான தெளிவான ஒன்றாக இல்லாமல் குழப்பமான அறிவிப்புகளால் அலைகழிக்கப்படும் மாணவர்கள். பள்ளிக்கு சென்று சேர்ந்ததும் இன்றைக்கு உங்களுக்கு விடுமுறை என வாய்மொழியாக மாணவர்களை திருப்பி அனுப்பி வைத்த சம்பவங்களால் மன உளைச்சலுக்கு மற்றும் சென்றுவரும் அலைச்சல்களுக்கும் ஆளாகி இருகிறார்கள் தமிழகத்தில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்கள்.

முன்பே திட்டமிட்டபடி 1 ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மே 6ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அறிவிப்பு பள்ளிகல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டது.

பெரும்பாலான அரசு பள்ளிகள் மே 5 ஆம் தேதி இறுதித் தேர்வுகளை துவக்கும் பொருட்டு அதனை அறிவிப்பாக வெளியிட்டு விட்டார்கள். ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தேர்வு நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என்றும் ஓர் அறிவிப்பினை மே நான்காம் தேதி வெளியிட்டார்கள.

இந்த அறிவிப்பினை முறையாக அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவிக்காமல் விட்டுவிட்டதால் மே 5 ஆம் தேதியன்று தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களிடம் இன்று உங்களுக்கு தேர்வு இல்லை என்று நீங்கள் திரும்பிச் செல்லலாம் என அறிவுறுத்தப்பட்டு கடும் வெயிலில் அவர்கள் திரும்பச் சென்று இருப்பார்கள்.

பின்பு இதே போல் ப்ளஸ் 2 தேர்வு எழதும் மாணவர்களை காலை எட்டு மணிக்கு வரவேண்டும் முகக்கவசம் தேவையில்லை என்றும் சொல்லப்பட்டது பின்னர் உடனே தேர்வுக்கு முன்னர் இரவில் காலை 9 மணிக்கு வரவேண்டும் மாஸ்க் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டது, மேலும் தனியாக தண்ணீர் புட்டிகளும் கொண்டு வரக்கூடாது என்று முரணான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

சுமார் இரண்டு வருடங்களாக சரிவர பள்ளிக்கு செல்ல முடியாமல் கடும் மன அழுத்தத்தில் இருந்த மாணவர்களை இப்படிப்பட்ட மாற்றி மாற்றி செய்யப்பட்ட பல அறிவிப்புகளினால் 32,674 மாணவர்கள் ப்ளஸ் 2 தேர்வினை எழுத வரவில்லை என்ற தகவலால் கூட பள்ளிகல்வித்துறை முறையான அறிவிப்புகளை முன்னேற்பாடுகளை செய்வதில் இருந்து தவறியுள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

எதிர்காலத்தில் என்னவெல்லாம் பயின்று சாதனை புரியவேண்டும் என்று கற்க முனையும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முறையான அறிவிப்புகளை தெளிவுடன் மாணவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.