சென்னை மே 3, 2022
2018 ஆம் ஆண்டில் நம்மவர் நிறுவனத்தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களால் துவக்கப்பட்டது நேர்மையின் உண்மையான மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கட்சியாக மக்கள் நீதி மய்யம்.
எதிரிகளால் அளிக்கப்பட்ட பல இன்னல்களையும் புறந்தள்ளிவிட்டு வெற்றிகரமாக 5 ஆம் ஆண்டில் புதுப்பொலிவுடன் தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறது மக்கள் நீதி மய்யம். 2019 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து நின்றும் 2021 ஆம் ஆண்டில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் போட்டியிட்டும் பின்னர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகள் தேர்தல் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் என மக்களுக்கான வாக்கு அரசியலில் நெஞ்சில் உரமுடனும் நேர்மையின் துணையுடனும் எந்த ஊழலுக்கும் அடிபணியாமல் பொதுமக்களுக்கு பிற கட்சிகள் போல் பரிசுப் பொருட்கள் பணம் நகைகள் என எந்த கையூட்டும் தராமல் மக்களின் மனதை வென்றெடுத்த மய்யம் தொடர்ந்து மக்களுக்கான தூய அரசியலை முன்னெடுத்து வருகிறது.
நடப்பில் உள்ள 2022 ஆம் ஆண்டில் மே 3 ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள தலைமையகத்தில் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் ஆகியோரும் கலந்து கொள்ள தலைமை செயற்குழு கூட்டம் இனிதே நடைபெற்றது. நேரிடையாக கலந்துகொண்டு சிறப்பிக்க முடியாமல் போனாலும் ஜூம் காணொளி வழியாக தங்கள் பங்களிப்பை உறுதி செய்தனர் மற்றைய மாநில செயலாளர்கள் மற்றும் மண்டல அமைப்பாளர்கள்.
இக்கூட்டத்தில் தலைமையேற்றுச் சிறப்பித்த தலைவர் அவர்களின் அறிவுரைகளின்படி ஆலோசனைகளின்படி மற்றும் கட்சியின் செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டன என செய்திகுறிப்பில் தெரியவருகிறது.