திருநெல்வேலி ஏப்ரல் 23, 2022
திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூர் எனுமிடத்தில் அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்று வந்தது. இதையொட்டி அங்கே பாதுகாப்புப் பணியில் பெண் உதவி காவல் ஆய்வாளர் மார்கரெட் திரேசா மற்றும் காவலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
கோயில் கொடைவிழா முடிந்ததும் அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ளெக்ஸ் பேனர்களை அகற்றுவதில் ஆறுமுகம் என்பவருக்கும் காவல் துணை ஆய்வாளர் மார்கரெட் திரேசா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
நடந்த வாக்குவாதத்தில் பிளெக்ஸ் போர்டு அகற்றுவதற்காக வைத்திருந்த கத்தியால் ஆறுமுகம் காவல் துணை ஆய்வாளரை குத்திவிட்டார். அங்கே குழுமியிருந்த காவலர்கள் உடனடியாக ஆறுமுகத்தை கைது செய்தனர் கத்திகுத்தினால் காயமடைந்து இருந்த பெண் காவலரை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதில் நடந்த விசாரணையின்போது நடந்த சம்பவத்திற்கு முன்னதாக ஓர் நாள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தது தெரிய வந்தது. இந்த முன்விரோத பகையினால் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கத்திகுத்தினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உதவி காவல் ஆய்வாளரை நெல்லை சரக டி ஐ ஜி உட்பட பல காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதனிடையே இந்த தகவலை அறிந்த தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்துவிட்டு மேலும் உயர்சிகிச்சை பெறுவதற்கும் உத்தரவிட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மது போதை என்பது இன்னார் என்றும் எவர் என்றும் தெரியாமல் போகச்செய்து விடுகிறது மது அருந்துவதால் ஏற்படும் போதை. படிப்படியாக குறைப்போம் என்பதையும் மதுவிலக்கு செய்வோம் என்பதையும் எப்போது சொன்னோம் என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தமிழகம்.
என்று தணியும் இந்த மதுவின் மோகம் ?
https://tamil.indianexpress.com/tamilnadu/woman-si-stabbed-in-tirunelveli-accused-held-444782/