சென்னை ஏப்ரல் 25, 2022

மாநில அரசுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொது பல்களைகழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நியமிப்பதன் அவசியத்தையும் நியமிக்கும் உரிமையையும் பற்றிய சட்டத்திருத்த மசோதாவை மாகராஷ்டிராவின் அரசு கொண்டுவந்த போதே அதனை வரவேற்று பேசிய மக்கள் நீதி மய்யம் எல்லா மாநிலங்களையும் விட முன்னோடியாகத் திகழும் தமிழக அரசு இதனை அவர்களுக்கும் (மகாராஷ்டிரா அரசு) முன்னதாக செய்து இருக்க வேண்டும் என்று கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தின் 30ஆம் தேதியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் அறிக்கையை தற்போது மேற்கோள் காட்டி இருக்கும் ம.நீ.ம அதன் சாராம்சத்தை ஏற்று செயல்பட்ட தமிழக அரசின் மசோதா குறிப்பிடுவது யாதெனில் இனி பல்கலைகழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் புதிய சட்ட மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் ஆளும் திமுக அரசு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம்.

அது மட்டுமல்லாது மாநில ஆளுநரின் அதிகாரத்தையும் திமுக அரசு மறுவரையறை செய்ய வேண்டும் என்ற முந்தைய தேதியில் கோரிக்கை விடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தது.

மக்கள் நீதி மய்யம் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை அறிக்கை (கீழே)