மதுரை மே 21, 2022

தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் கதை வசனத்தில் வெளியான படம் தேவர் மகன். நடிகர் திலகம் சிவாஜி அவர்களும் மற்றும் நம்மவர் நடித்து வெளியான படத்தில் ஒரு காட்சியில் இருவருக்கும் மத்தியில் நடக்கும் உரையாடலில் வரும் வசனம் இன்றுவரை பேசப்படுகிறது. அது மீம் வழியாக அல்லது வேறு ஏதேனும் ஊடக வாயிலாக காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அந்த உரையாடலின் வீரியம் அவ்வளவு சிறப்பு. அர்த்தம் பொதிந்த ஒன்று. எத்தனை வருடங்கள் ஆயினும் எல்லா காலக்க்கட்டதிலும் பொருந்திப் போகக்கூடிய வசனம் என்றால் மிகையாகாது.

“விதை விதைச்ச உடனே பழம் சாப்பிடனும்னு நெனைக்க முடியுமோ ? இன்னைக்கு நான் விதைக்கிறேன், நாளைக்கு நீ பழம் சாப்புடுவே. அப்புறம் உன் மயன் சாப்புடுவான், அதுக்கப்புறம் அவன் மயன் சாப்புடுவான். அதெல்லாம் வந்து பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன்ப்பு ; ஆனா விதை நான் போட்டது”

சாத்தியம் என்பது சொல் அல்ல செயல் – என்பார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். அவர் எப்போதும் சொல்வார் தனது ரசிகர்களை மற்றும் கட்சித் தொண்டர்களை பார்த்து “நீங்கள் சொல்வதோடு நின்றுவிடாதீர்கள், சொன்னதை செய்து தாருங்கள்” என ஒவ்வொரு முறையும் தவறாமல் சொல்வார் அது கட்சி ரீதியாக நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அல்லது நற்பணி இயக்கப் பணிகளில் ஈடுபடும்போதும் சரி செய்கிறோம் என்று கொடுத்த வாக்கினை நிறைவேற்றி ஆக வேண்டும்.

அப்படி ஓர் உத்வேகம் கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள தனக்கன்குளம் எனும் ஊரில் கண்மாயில் நிறைந்திருந்தன. 2019 ஆம் வருடம் கருவேல முட்செடிகளை முற்றிலுமாக அகற்றிவிட்டு அங்கே 3000 பனை விதைகளை விதைத்து வந்தது இன்றைக்கு அவைகள் கன்றுகளாக முளைவிட்டு துளிர் விட்டிருந்தது. மண்ணின் ஈரத்தன்மையை முற்றிலுமாக ஒழித்துவிட்டு வறட்சியை தந்த கருவேல மரங்களை அகற்றி அதே ஈரத்தன்மையை தக்கவைத்து மண் அரிப்பை தடுக்கும் வல்லமை கொண்ட பனைமரங்கள் இன்னும் வருடங்கள் செல்லச்செல்ல ஓங்கி உயர்ந்து அப்பகுதியில் பணியைச் சார்ந்த சிறுதொழில்கள் சற்றே வளர ஏதுவாக இருக்கும்.