திண்டிவனம் மே 10, 2022
எத்தனை போராட்டங்கள் எத்தனை தலைவர்கள் தங்கள் வாழ்வில் இந்த சாதியை ஒழிக்க போராடி மறைந்தும் போனார்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்ன சட்டங்கள் போட்டாலும் சாதியினால் உண்டாகும் வன்மத்தை எப்படி போக்க ?
திண்டிவனம் அருகே பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், சாதிக் கொடுமையால் சக மாணவர்களாலேயே தீயில் தள்ளப்பட்டிருக்கிறான். கள்ளம் கபடமற்ற பிஞ்சுநெஞ்சில் சாதி எனும் நஞ்சு கலக்கத் தொடங்கியுள்ளது ஆபத்தான போக்கு.
மாணவர்களிடையே ஊடுருவியிருக்கும் சாதித் தீயை உடனே அணைக்காவிட்டால், அது நாளைய சமூகத்தை சீரழித்துவிடும். பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவியல் பயிற்சியளிக்கத் தேவையான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ளவேண்டும்.