சென்னை மே 19, 2022

தமிழ்நாடு முழுதும் வருகின்ற 21 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் தேர்வுகளை எழுத காத்திருக்கும் 11 லட்சத்து 78 ஆயிரம் பேர்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் இந்த தேர்வுகள் விதிமுறைகளின்படி நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே. பல ஆண்டுகளாக பயிற்சி செய்து தேர்விற்கென தங்களை தயார் செய்து கொண்டிருக்கும் தேர்வர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்து எந்தவித முறைகேடுகளும் இன்றி இத்தேர்வினை தேர்வாணையம் நடத்தும் என்று மக்கள் நீதி மய்யம் எதிர்பார்க்கிறது.

மே 21-ம் தேதியன்று நடைபெறவுள்ள குரூப் – 2 தேர்வானது, கடந்தகாலத் தேர்வுகளில் நடந்ததுபோன்ற முறைகேடுகளுக்கு இடமளிக்காத வகையில் நடத்தப்படவேண்டும் என்பதே வருடக்கணக்கில் படித்து இலட்சியக்கனவோடு தேர்வை எதிர்நோக்கியுள்ள 11 லட்சத்து 78 ஆயிரம் பேரின் எதிர்பார்ப்பு ஆகும். 2016, 2017, 2019 ல் டி.என்.பி.எஸ்.சி நடத்திய தேர்வுகளில் எழுந்த முறைகேடு குறித்தான குற்றச்சாட்டுகளிலிருந்து உரிய பாடத்தைக் கற்றுக்கொண்டு நேர்மையான தேர்வு நடத்தப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.

இத்தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

https://timesofindia.indiatimes.com/city/madurai/118-arrested-in-tnpsc-group-exam-scam-cb-cid-tells-hc/articleshow/87635534.cms

https://www.bbc.com/tamil/india-51595331

https://www.puthiyathalaimurai.com/newsview/62861/tnpsc-investigation-started-about-group-2a-and-4-exam-abuse