திருச்சி மே 31, 2022

மக்கள் நீதி மய்யம் அதன் நிறுவனத்தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கும் மிகச்சிறந்த அகிம்சை ஆயுதம் இந்திய அரசியல் சட்டம் மட்டுமே. எந்த மனிதர்கள் வேண்டுமானாலும் தங்கள் மனதை குணத்தை இயல்பைத் தொலைத்து தங்கள் சுயத்தை நேரத்திற்கு தகுந்தாற்ப் போல் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், நமது இந்திய நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் எவருக்கும் வளைந்து கொடுக்காத ஓர் நேர்மையான கொம்பன் என்னைப் போன்றே என்று உறுதியாகச் சொல்வார்.

அவருடைய வழியில் ஓர் நேர்மையான வழக்கறிஞராக தனது சீரிய பணியினை சட்டத்தின் துணையுடன் நடத்திச் செல்கிறார் திருச்சியைத் சேர்ந்த திரு S.R கிஷோர்குமார் எனும் ஓர் நல்மனிதர். மக்கள் நீதி மய்யம், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் ஆக சிறப்பாக பணியாற்றி வரும் இவர் செய்து வரும் மக்கள் பணி மிகவும் சிறப்பு பல நன்மைகளை தொடர்ந்து செய்து வரும் கிஷோர்குமார் அவர்களை மய்யத்தமிழர்கள் உளமார வாழ்த்துகிறது.

இதற்கு சான்று சமீபத்தில் நடந்த ஓர் நிகழ்வு அதனை முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறார் வழக்கறிஞர் திரு கிஷோர்குமார் அவர்கள். அதன் விரிவாக்கம் உங்களின் பார்வைக்கு கீழே தொடர்கிறது.

பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் ரத்து செய்ததை சுட்டிக்காட்டியது ம.நீ.ம….? இன்று தமிழக முதல்வர் நேரில் ஆய்வு…!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகளை களைய வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வாடிக்கை. ஆனால் கடந்த வாரம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் நடை பெறவேண்டிய குறைதீர்ப்பு கூட்டம் “நிர்வாக” காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது.

இதனை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் கடுமையான கண்டனத்தை தெரிவித்ததுடன், திருச்சி மேயர் வேறு அலுவல் பணி காரணமாகவே பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கண்டனம் தெரிவித்திருந்தோம். மேலும் இதனை தமிழக அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம்.

இதனிடையே திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டதுடன், திருவாரூரில் இன்று [30.05.2022] ந் தேதி நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக முதல்வர் இன்று [30.05.2022]ந் தேதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மய்ய அலுவலகத்திற்கு நேரில் ஆய்வு செய்ததுடன் பொதுமக்களிடமிருந்து குறைதீர்ப்பு நாளான இன்று மனுக்களையும் நேரில் பெற்றார்.

பொதுமக்கள் இன்னல்களை சுட்டிகாட்டிய மாத்திரத்திலே அதிரடியாக அதிகாரிகளை இடமாற்றம் செய்து. பொதுமக்களின் குறைகளை நேரில் ஆய்வு செய்த தமிழக முதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.

குறை தீர்ப்பு நிகழ்வை ரத்து செய்ததை சுட்டிக்காட்டிய மக்கள் நீதி மய்யம்